தீ தித்திக்கும் தீ 8-14

அத்தியாயம்-8
ஷ்ரவன் இருவரின் அருகில் வந்தவன் சட்டென்று ஷன்மதியை கன்னத்தில் அறைந்திருந்தான்...
“இப்படி நடுராத்திரியில அப்படி அவசியமா அவனைப் பார்க்க போகணுமா என்ன...” என்று கேட்கவேறு செய்தான்...
அவள் தகப்பனின் அடியை தாளாது விழப்போக,சக்தி அவளைத் தாங்கியிருந்தான்...
ஷ்ரவன் அருகில் வரவும் சக்தி “மாமா அது” என்று சொல்லும்போது அவனைத் தனது கை காண்பித்து...
“நிறுத்து உன்கிட்ட எதுவும் கேட்கணும்னு அவசியமில்லை... என் பிள்ளைக்கும் எனக்கும் இடையில் நீ சமாதானம் பேச வரவேண்டாம்” என்று கர்ஜித்தான்...
சக்திக்குக் கோபம் வந்தாலும் ஷன்மதி செய்தது தப்பு என்றிருக்க, எதுவும் சொல்லவியலாமல், ஒன்றுமே பேசாமல் "மதி" என்றழைக்க அவளோ தந்தை தன்னை அடித்ததைத் தாங்கிக்கொள்ளவியலாமல் அழுதாள்...இதுவரை அதட்டிக்கூடப் பேசாதவர் இன்று அடித்திருக்கிறார் என்றால் நம்ம பெரிய தப்பு பண்ணிட்டமோ என்று அழுதாள்...
திரும்பவும் "மதி" என்றழைத்தவன்...அவள் சக்தியின் முகத்தைப் பார்க்க" இனி கல்யாணம் வரைக்கும் நீயும் நானும் பார்த்துக்கவேண்டாம். இன்னும் இரண்டு நாளில் ஹைதரபாத் கிளம்பிடுவேன்...எதுனாலும் போன் பண்ணு, வர்றேன்டா" என்றவன் யாரையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை...கோபத்தில் விறுவிறுவென்று வெளியேவந்து தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்...
மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், ஷன்மதி முன்னறையில் அமர்ந்திருக்க, ஷ்ரவன் ஹரிதாவிடம்
“நீ அவ என்ன பண்றானு கவனிக்க மாட்டியா...” என மனைவியிடம் எகிறினான்...
ஹரிதா "எப்போ வெளியேப் போன? எப்படிப் போன? மாப்பிள்ளை கொண்டுவந்து விட்டுவிட்டு போறாரு என்ன விஷயம் சொல்லித்தொலை?” என மகளிடம் கேள்விகளை அடுக்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகக் குனிந்து அமர்ந்திருந்தாள்...
அங்குச் சிறிது நேரம் நிசப்தமே ஆட்சி செய்ததது...ஹரிதாவுமே இதை எதிர்பார்க்கவில்லை...ஷ்ரவன் மகளை அடித்தது அவளுக்கமே அதிர்ச்சிதான்..
இப்போது மகளின் அருகில் வந்தவன் அவளது கன்னத்தைத் தடவிக் கொடுத்தான் அவனது விரலின் தடம்பதிந்திருந்தது... அவனாகவே சென்று ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து அவளது கன்னத்தைத் தடவி விட்டுக்கொண்டு இருந்தான்...
“சாரிப்பா” என்ற ஒரு வார்த்தையைத் தன் தந்தையை நோக்கி சொன்னவள், அப்படியே எழும்பிப் போய் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்...
சக்தி கோபத்தில் சென்றது ஷ்ரவனுக்கும் கொஞ்சம் ஒருமாதிரித்தான் இருந்தது...இவ்வளவு நேரமும் மகளைக் காணவில்லை என்று தேடியவன் விஷ்ணுவிற்கு அழைத்துக் கேட்க அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்...மகள் தனக்குத் தெரியாமல் சென்றுவிட்டாள் என்பதைவிட, சக்தியை பார்க்க போய்விட்டாள் என்பதைத்தான் தாங்கமுடியவில்லை, அதுவும் சக்தியே கொண்டுவந்துவிடவும் அவனின் ஈகோ தலைதூக்கியதும் மகளை அறைந்துவிட்டான்...
இப்போது வருந்தினான் அவனுக்கே தெரியவில்லை சக்தியை எதுக்குப் பிடிக்கவில்லையென்று...எப்படினாலும் தனது மகளுக்குத் திருமணம் செய்யவேண்டும்தான், அது சக்தியா இருக்கும்பட்சத்தில் என்ன தப்பு, ஏன் என்று அவனுக்குமே விளங்கவில்லை...
தனது மகள் தன்னைவிட இன்னொருத்தனை முக்கியமாகக் கருதுவதால் வந்தததோ? மகளுக்குப் பாதுகாப்பு இல்லையோ என்ற பயமும் காரணமோ? இப்போது சிறிது சமன்பட்டவன், மகளைப் பார்க்க அறைக்குள் சென்றான், அழுது அழுது அப்படியே தூங்கியவளின் கண்களின் ஓரம் ஈரம்...சிறிது நேரம் நின்று பார்த்தவன் திரும்பி சென்றுவிட்டான்...
வீட்டிற்குச் சென்ற சக்திகோ இன்னும் கோபம் அடங்கவில்லை... “நான் காதலிக்கிற பொண்ணு கல்யாணம், பண்ணிக்கப் போற பொண்ணு, எல்லாம் வீட்டில் பேசி உறுதி பண்ணியாச்சு என்ன பார்க்க வந்தது அவ்வளவு தப்பா...
அவர் மகளை அவர் என்ன வேணாலும் செய்யட்டும், ஆனால் என் முன்னாடியே அடிச்சாங்கனா, அப்போ என்னையும் அடிப்பேனுச் சொல்லாமல் சொல்லி என்னை இன்சல்ட் பண்றதா தான அர்த்தம்...” என்று வீட்டின் தோட்டத்தில் தூங்காமல் நடந்து கொண்டிருந்தான்... அவன்தான் கோபத்துடன் நடக்கிறான் என்றால், அவன் பின், லட்டுவும் நடந்து கொண்டிருந்தது...அவன் மேல் அதிக பிரியமுள்ள ஜீவனில் லட்டுவும் ஒன்று...
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டிக்கொண்டே நடந்தான்...சிறிது நேரம் சென்று தனதறைக்குச் சென்று நிம்மதியாக அயர்ந்து தூங்கியவன்...அடுத்த இரண்டு நாட்களுக்கும் அவன் முடித்துக்கொடுக்க வேண்டிய வேலைகள் அதிகமாக இருந்ததால், வேறு எந்தச் சிந்தையும் இல்லாமல் கடந்தவன்...
ஹைதராபாத் செல்லும்போது ஷன்மதியைப் பார்க்கவேண்டும் போல எண்ணங்கள் உந்தியது... என்னதான் இருந்தாலும் தன் மனதார விரும்புவளை பார்க்கணும் என்ற ஆசை, ஆனாலும் தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு அவளுக்கு அழைத்தான்...
எப்போ அழைப்பான் என்று காத்திருந்திருப்பாள் போல... உடனே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவள் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்...
“என்ன என் மாமனார் இன்னும் என்மேலக் கோபத்தில் தான் சுத்திட்டு இருக்காரா....இல்லை சமாதானமாகிட்டாரா...”
“டாடி என்கிட்ட பேசி இரண்டு நாள் ஆகுது என்கிட்ட பேசவே மாட்டுக்காங்க...” என அழுதாள்...
அவளைச் சமாதனம் படுத்தியவன்...
ஊருக்குச் செல்வதாகச் சொல்ல அதுவே அவளுக்குக் கூடுதலாக வருத்தத்தைக் கொடுத்தது...
ஷன்மதி அடம்பிடித்து “நானும் உங்க கூட ஏர்போர்ட் வரைக்கும் வர்றேன்” என்று அழுதாள்...
“வேண்டாம் நீ என்ன பண்ணாலும் உங்க அப்பா என் மேல வந்து எகிறுவாரு...நான் எதோ தப்புத் பண்றமாதிரி...அதுவுமில்லாமல் உன்னைப் பார்க்க முடியாதோன்னு ஏங்கிட்டு இருக்கேன்...போன்லயே பேசிப்போம்...
அப்புறம் உங்க பாட்டி நம்பரை எனக்கு அனுப்பு. அவங்ககிட்ட கொஞ்சம் பேசவேண்டியதிருக்கு” என்றான்.
“என்ன பேசபோறீங்க?...எதாவது பிரச்சனையா? வில்லங்கமா எதாவது பேசிவைக்கப்போறீங்க...சும்மாவே டாடிக்கு உங்கமேல கோபம் வருது...”
“மாமனார் போட்ட கண்டிஷனுக்கல்லாம் என்னால ஆடமுடியாது...அது என்ன ஆறுமாதம் கழித்துக் கல்யாணம் வைக்கிறது...உனக்குப் படிப்பு முடிய மூனு மாசந்தான இருக்கு...ஒரு மாசத்துல கல்யாணம் பண்ணிப்போம்...அதுக்குப்பிறகு இரண்டு மாத படிப்புத்தான பார்த்துச் சமாளிச்சிக்கலாம்...”
“நல்ல ஐடியாதான் ஆனா டாடி ஒத்துக்கணுமே?”
“அதுக்குத்தான்டி உங்க பாட்டி நிருபமா அம்மையாரோட நம்பர் அனுப்புனுச் சொல்றேன்... மீதியை நான் பார்த்துக்குறேன்...” அப்படியே அவளுக்குப் போனிலயே சிலபல முத்தங்களை வைத்து அவளைச் சிவக்கவைத்தான்...
சக்தி ஹைதராபாத் சென்று ஒரு வாரம் கழித்து.... நிருபமாவுக்கு அழைத்துப் பேசினான்.
அன்றிரவே ஷ்ரவனிடம் நேரடியாக என்ன பிரச்சனை நடந்தது என்று விசாரித்தார்...
அவன் அமைதியாக இருக்கவும்
“நம்ம புள்ளை மேல தப்பு இருக்கதான் செய்து இருந்தாலும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் முன்னாடி யாராவது அடிப்பாங்களா... அவர் ஏதோ சொல்ல வந்ததற்கும் நீ தடுத்திருக்கா. சரி நடந்தது நடந்ததுதான்... இனி மாற்ற முடியாது.
எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் முடிச்சு கொடுக்கிறோமோ அவ்வளவு நல்லது நம்மளுக்கு... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றதும் ஷ்ரவன் " சரிம்மா நீங்களே இனி முடிவெடுத்து சொல்லுங்க, நான் எல்லாத்தையும் செய்யுறேன்” என்று சுரத்தையேயில்லாமல் பேசினான்..
"டேய் கல்யாணம் உன் பொண்ணுக்குடா...சிரி...இஞ்சி திண்ண எதுவோ மாதிரி இருக்க"
ஷ்ரவன் “நிருபேபி நான் எதாவது பேசிடுவேன்...போயிடுங்க” என்றான்...
அடுத்த நாள் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் அழைத்த நிருபமா... “ஷன்மதியோட கல்யாணத்த அடுத்த மாசம் வைக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கோம். அதனால அந்த நேரத்துல ஏதாவது பிசினஸ் மீட்டிங் வெளியூர் பயணம் இல்லாம பார்த்து, எல்லாத்தையும் தவிர்த்துவிடுங்கள்...
மூனாவது தலைமுறையோடு முதல் கல்யாணம் அதனால் கண்டிப்பா எல்லாரும் இருக்கணும்.
அதுவும் வீட்டுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை கண்டிப்பாக விமரிசையாக நடத்தணும்” என்று கூறினார்...
எல்லோருக்கும் சந்தோஷம்...ஷன்மதியோ அவளது தந்தையை நோக்க, அவனோ மகளை திரும்பி கூடப் பார்க்கவில்லை...
நிருபமா மெதுவாக அவளிடம் தலையசைத்து ,
“நீ ஒன்னும் கவலைப்படாத எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆறுதல் சொன்னார்...
இங்குச் சக்தி தன் அம்மாவிற்கு அழைத்து,
“மொத்தமாகப் பணம் போட்டுவிட்டிருக்கேன்...பொண்ணுக்கு வாங்குறது எல்லாமே என் பணத்துலதான் வாங்கணும்....” அதுவுமில்லாமல் வீட்டினற்கும் சேர்த்தே துணியெடுக்கச் சொல்லியிருந்தான்...
“தாலிமட்டும் நான் வந்து வாங்கிடுவேன்” என்றுவிட்டான்.
நிலா "நாங்க சொல்றதெல்லாம் நீ எப்போ கேட்கப்போறயோ...ஏன்டா இப்போ ஒரு மாதத்துல கல்யாணத்தை வைக்கிறதுக்கு என்ன அவசரம், எல்லாருக்கும் கஷ்டம்"
“அதுவா இங்க ஹைதரபாத்துல ஒரு சாமியார் எனக்கு அருள்வாக்கு சொன்னாரு உங்க மகன் சக்திக்கு இன்னும் ஒரு மாசத்துக்குத்தான் குரு பார்வை இருக்காம்...இல்லைனா நான் சாமியாரா போயிடுவேனாம்...எப்படி நான் சாமியாரா போகட்டுமா? இல்லை சம்சாரியாகட்டுமா? " எனச் சிரிக்காமல் கேட்க...
நிலா சிரித்துவிட்டாள்... “போடா எப்பவும் இடக்கு மடக்கா பேசிகிட்டு...நீ எப்போ வருவ அதைச் சொல்லு...”
“ம்மா...மொத்தமே ஒருவாரம்தான் லீவு கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வருவேன்...அவ்வளவுதான்....மீதியெல்லாம்
நீங்களே பார்த்துக்கோங்க” என்றுவிட்டான்.
திருமணத்திற்காகக் கதிர் மற்றும் நிலா சென்னைக்கு வந்துவிட்டனர்...திருமணம் பெண் வீட்டில் வைப்பதால் எல்லாமே ஷ்ரவன் வீட்டினரின் ஏற்பாடாக இருந்தது...அதற்கு அடுத்தநாள் சக்தியின் அப்பா கதிரின் சொந்த ஊரான மதுரையில் சொந்தங்களுக்காக வரவேற்பு வைப்பதாகப் பிளான்...
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வந்த சக்தி ஷன்மதியை திருமணத்தன்று மட்டுமே பார்க்கவேண்டும் என்று முடிவோடுதான் இருந்தான்...
அவள் எவ்வளவு அழைத்தும் தனது முடிவில் உறுதியாக நின்றான்...
அன்றைக்கு ஷ்ரவன் அவனை அவமானப் படுத்தியதாகவே நினைத்து...இந்த முடிவை எடுத்திருந்தான்.
சக்தி திட்டம் தீட்டி, தனது திருமணத்தைச் சீக்கிரம் முடிக்கச் செயல்படுத்திவிட்டான்...
ஆறுமாதத்திற்குப் பின் திருமணம் என்று ஷ்ரவனின் கட்டளையைத் தவிடுபொடியாக்கி, அவனது செல்லமகளின் கழுத்தில் தாலியும் கட்டித் தனது மனைவியாக்கிக்கொண்டான்...
இன்றுதான் சக்தி-ஷன்மதியின் திருமணம்...
காலையிலயே மாப்பிள்ளை அழைப்பு முடிந்து உள்ளே சக்தி வரவும், ஷ்ரவன் மிகவும் பரபரப்பாக நின்றிருந்தான்...
சக்தி அவனைக் கண்டுக்கவேயில்லை, மண்டபத்தின் வாசலில் நின்றிருந்த,அனைவரையும் பாரத்து புன்னகைத்தவன்...மாமனாரைப் பார்த்ததும் முகம் கடுகடுவென மாறியது...
வேட்டி சட்டையில் அப்படியே ஐயனார் போல உயர்ந்து வளர்ந்து, மீசையும் பாந்தமாக இருக்க, அவன் நடந்துவந்த தோரணையே சொன்னது...நான் ஒரு தனிக்காட்டு ராஜா என்று...
மணவறையில் அமர்ந்ததும் ,ஷன்மதியை அழைத்துக்கொண்டு வந்து மணவறையில் அமர்த்தினர். சக்தி அவளைப் பார்த்து கண்ணடித்தவன், அப்படியே கீழே நின்றிருந்த ஷ்ரவனைப் பார்த்தும் கண்ணடித்து வைத்தான்...
“மணமேடையில இருந்தும் கொழுப்புக் குறையுதாப்பாரு இவனுக்கு” என்றவன்...ஏற்கனவே கடுப்பிலிருந்தவன் இப்போது கோபத்தில் இருந்தான்.
புரோகிதர் கண்ணிகாதானம் செய்துகொடுக்க அழைத்ததும் சென்றவன் மகளின் கைப்பிடித்து சக்தியின் கையில் கொடுக்கும்போதுதான் ஷ்ரவனின் கண்ணீர் ஷன்மதி மற்றும் சக்தியின் கையில் விழுந்தது...
ஹரிதா கணவனின் தோளைப்பிடித்துச் சமாதானம் செய்தாள்....
சக்தியுமே அந்த நிமிடம் மிகவும் கனமானதாகவே உணர்ந்தான் தாலிக்கட்டும்போது மட்டும் தனது தகப்பனையும், மாமனாராகிய ஷ்ரவனையும் பார்க்க இருவரும் தலையசைத்ததும் தாலியை ஷன்மதியின் கழுத்தில் கட்டி முதல் முடிச்சுப் போட்டான்...அதன்பின் சக்தியின் அக்கா மீதி முடிச்சு போட்டுவிட்டாள்....
குங்குமம் வைக்கும்போதுதான்...நேராக வைக்கப்போக....மற்றவர்கள் சுற்றிதான் வைக்கணும் என்க...
அவனோ ‘நான் நேராதான் வைப்பேன்’ என்று அடம்பிடித்து வைக்க...அதுக்குப்பிறகு எந்தச் சாங்கியத்தையும் இப்படித்தான் செய்யணும்னு யாருமே அவனிடம் சொல்லவில்லை...எப்படியும் நம்ம சொன்னா ஏட்டிக்குப் போட்டி செய்வான்னு தெரியும் என்று...
மணமேடையிலிருந்து நேராக ஷன்மதியின் கையைப்பிடித்து அழைத்துவந்தவன்...தனது தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்...
அடுத்து நிருபமாவிடம் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்...
ஷ்ரவன்-ஹரிதாவிடம் ஆசிர்வாதம் வாங்காமல் நிற்க...ஷன்மதி சட்டென்று சக்தியின் கையைப்பிடித்திழுத்து தனது பெற்றோரின் காலில் விழ வைக்க...தனது மனைவிக்காகக் குனிந்தான் அவ்வளவே...
ஷ்ரவன் சட்டென்று தனது மகளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்...
வேறு எதுவுமே பேசவில்லை...
ஷ்னமதியின் வீட்டிற்குச் சம்பிரதாயத்திற்குப் போய்விட்டு உடனே வந்துவிட்டனர்...
திருமண நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும்,
பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் அவர்களுக்கென்று ப்ர்ஸ்ட் நைட் ரூம் ஏற்பாடு செய்யப்படடிருந்தது...இரவு மணமக்களை அங்குவிட்டு சென்றிருந்தனர் அனைவரும்...
தனியறை கிடைத்தும் சக்தி அமைதியாக ஷன்மதியை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தானே தவிரப் பக்கத்தில் நெருங்கவேயில்லை...
ஷன்மதிதான் தானாக அவனிடம் நெருங்கி "பாட்டிக்கிட்ட என்னப் பேசுனீங்க அப்படி, அவங்க டாடியவே கன்வீன்ஸ் பண்ணி, ஒரு மாசத்துலக் கல்யாணத்தை வச்சுட்டாங்க"
அவளை இழுத்து தனது மடியில் இருத்தியவன்"ஹான்..அதுவா. இப்பவே கல்யாணம் பண்ணி வைங்க இல்லைனா உங்கப் பேத்தியிருக்க ஸ்பீடுக்கு பிள்ளைக்குட்டியோடத்தான் மணமைடையில் இருப்போம்...உங்களுக்குப் பரவாயில்லையானுக் கேட்டேன்" எனச் சக்தி சிரிக்காமல் சொல்லவும்...
உண்மையா இவன் சொல்லியிருந்தாலும்
சொல்லியிருப்பான் என்று நினைத்தவள்...
"அப்படியா சொன்னீங்க, ஐயோ பாட்டி என்ன நினைச்சிருப்பாங்க"
சக்தி " உண்மையாகவே நீ வக்கீலுக்குத்தான் படிக்கிரறியா, எனக்குச் சந்தேகமாகவேயிருக்கு"
அவள் புரியாமல் யோசிக்க...அவளை இழுத்து தனது மடியில் வைத்தவன் " அப்படியே எக்ஸாக்ட்டா யாராவது சொல்லுவாங்களா, யோசிக்கமாட்டியா...அந்த விசயத்தையே கொஞ்சம் டீசண்ட்டா சொன்னேன்...பாட்டி செம ஷார்ப் விசயத்தைப் புரிஞ்சிகிட்டாங்க...” எனச் சிரித்தவனை அவள் முறைத்துப் பார்க்க...அவனோ இன்னும் அதிகமாகச் சிரிக்க...
அவனது சிரிப்பில் அப்படியே மயங்கிய ஷன்மதி, மெதுவாகத் திரும்பி அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டாள்...
அது அவனுக்கு வசதியாகப்போயிற்று, அப்படியே அவளது இதழ்களைத் தனது விரல்கொண்டு நிரடியவன், வலிக்கப்பிடித்து இழுக்க, கையைத்தட்டி விட்டவள் “வலிக்குது சக்தி” என உதட்டை தடவிக்கொண்டே சொல்ல அடுத்து அவன் கடித்த இடம் எதிர்பார்க்காதது என்பதால் துள்ளிவிட்டாள்...
உடனே அவனது மீசையைப் பிடித்திழுத்து...
“எங்க கடிச்சு வைக்கீங்க... கெட்டப்பையன் நீங்க.
எங்க கடித்திழுக்க வசதியோ அங்கதான் கடிக்க முடியும்” எனக் கண்சிமிட்ட...அதைப்பார்த்து வெட்கியவளை...
இழுத்தணைத்துக் கொண்டு படுத்துவிட்டான்...
ஷன்மதி "ஏன்” என்று அவனைப் பார்க்க
“இங்க வேண்டாம், இதுல எத்தனைபேரு பர்ஸ்ட்நைட் கொண்டாடினாங்களோ...
எனக்கு இந்த அரேன்ச்மெண்ட் பிடிக்கலை. வேண்டாம்னு சொன்னா உங்கப்பாவுக்குக் கோபம் வரும். எதுக்குத் தேவையில்லாத டென்ஷன்னுதான்
நீ கேட்டதுக்குச் சரினு சொன்னேன்.
நம்ம பர்ஸ் நைட்டை நாளைக்குக் கொண்டாடலாம்...எனக்கு பிடிச்சமாதிரி, நமக்குப் பிடிச்ச மாதிரி” என்றவனை இறுக்கமாகக் கட்டிபிடித்துக்கொண்டாள் அவனது மனையாள்...
அத்தியாயம்-9
நல்லத்தூங்கி எழுந்த சக்தி திரும்பி பார்க்க ஷன்மதியோ ஆழ்ந்த தூக்கத்தில், அவளை அப்படியே தூக்கவும் கண்ணைத் திறந்தவள் அப்படியே அவனது தோளில் கைப்போட்டு பிடித்துக்கொண்டவள், அவனின் நெஞ்சோடு சாய்ந்து தூங்காரம்பித்தாள்...
மெதுவாகக் கள்ளச்சிரிப்புடனே ஷன்மதியை தூக்கிச் சென்றவன், அப்படியே குனிந்து பாத்டப்பில் இறக்கிவிட்டுவிட்டான் தண்ணீர் மேலப்பட்டதும்தான் துள்ளி எழுந்தவள், சக்தியையும் உள்ளே இழுத்து நனைத்துவிட்டாள்...
“என்ன சக்தி இப்படிச் செஞ்சிட்டீங்க...?”என்று சிணுங்கியவாரே அவனிடம் ஒன்றினாள்...இருவரும் ஜலக்ரீடையெல்லாம் முடித்துக் கிளம்பித் தயாராகவும் அவர்களை அழைத்துச் செல்ல
விஷ்ணுவும், ஷன்மதியின் பெரிய அத்தை பையனும் வந்திருந்தனர்...
ரூமிலிருந்து கீழிறங்கி வரவும் அவர்கள் இருவரையும் பார்த்தவள் " ஹாய் விஷ்ணு பையா என்னடா...காலையிலயே கூப்பிடவந்துட்டீங்க...” என்றவள் சக்தியின் கையைவிட்டு விஷ்ணுவின் கையைப்பிடித்துக் கேட்கவும், சக்தி விஷ்ணுவை ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க...
(விஷ்ணுவோ மனதிற்குள் "இவர் ஒருத்தர், செய்ற சேட்டையெல்லாம் அவரு பொண்டாட்டி பண்ணுவாளாம், முறைப்பு மட்டும் நமக்கு...நல்லாயிருக்கு இவங்க கதை” எனத் திட்டிக்கொண்டான்)
சக்தியின் மொத்தக்குடும்பமும் மதுரை சென்றுவிட்டனர்...மணமக்கள் இருவரும் ஷ்ரவன் வீட்டுக்கு வந்து விருந்தை முடித்துக்கொண்டு, எல்லோரும் மதுரைக்குக் கிளம்பிவிட்டனர்...
மாலைவேலையில் கதிரின் வீடு ஜொலித்தது...கடைசி மகனின் திருமணம் என்பதால் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தான்...
மணப்பெண்வீட்டினர் தங்குவதற்கு என்றும் நன்றாக ஏற்பாடு செய்திருந்தனர்...ஷ்ரவனும் கதிரும் இப்போது சம்பந்தியாதாலால் ஒருவருக்கொருவர் முறைத்துக்கொள்ளாமல் சமாதானமாகவே இருந்துக்கொண்டனர்...
அங்கு வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக முடிந்தது... வீட்டிற்கு அழைத்து வந்தனர் இருவரையும்.கதிரின் பழைய வீடு பிள்ளைகள் வளர்ந்ததும் பெரிதாக எடுத்துக் கட்டப்பட்டிருந்தது....
பெரியவன் வேதவிகாஷ் இஞ்சினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்று டெல்லியில் வேலை பார்க்கின்றான்...ரிசர்ச் பிரிவுல இருக்கான்...அவனுக்குத் திருமணம் முடித்து ஒரு பையன் இருக்கின்றான்...இரண்டாவது பெண் நந்திதா ...அவளும் தகப்பனின் சொல்கேட்டு பயோ இன்ஞ்சினியரிங்கில் முதுகலை பட்டம் பெற்றாள், திருமணம் முடிந்து அரபுநாடொன்றில் குடும்பமாக இருக்கின்றாள்...
லேட்டா வந்து லேட்டஸ்டா நிக்குற நம்ம சக்தி எம்.ஏ. சோசியாலஜி படித்துவிட்டு...சிலபல தண்டச்சோறு பட்டங்கள் பெற்றுத்தான்...ஐ.பி.எஸ் பாஸானார்...
அவர்களின் வளர்ச்சிக்கேற்றவாரு வீட்டை மாற்றியமைத்துக் கட்டிக்கொண்டார்கள்...கதிரும் நிலாவும்.
அந்த வீட்டின் அமைப்பு ஷன்மதிக்கு ரொம்பப் பிடித்திருந்தது...பழமையும் புதுமையும் சேர்ந்தமைப்பு...
இரவுவேளை என்பதால் அங்குவீசிய குளிர்ந்த காற்று மனதிற்கே இனிமையாக இருந்தது...
சென்னைவாசியான ஷ்ரவன் குடும்பம் உடனே கிளம்பிவிட்டனர்...
இப்போது ஷன்மதியும் சக்தி, அவனது குடும்பம் மட்டுமே...
அண்ணன், அக்காவிடம் ரொம்பப் பாசம் சக்திக்கு. அவர்களுக்குமே சக்தியென்றால் தனிப்பாசம் கடைக்குட்டி என்பதால்...
ஷன்மதி, நிலா, நந்திதா எனப் பெண்கள் பேசிக்கொண்டிருக்க... சக்தி மெதுவாக எட்டி பார்த்தவன்... அவர்களுடன் வந்து அமர்ந்து
“என்ன ரகசிய பேச்சு நடந்துட்டு இருக்கு... என்ன பத்தி எதுவும் என் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறீங்களா?...”
“ஆமா இவரு பெரிய வீர சூர புலி ஒரே பெருமைகளை எடுத்துச் சொல்வதற்கு...
பெருமை ஒன்னும் இல்ல வெறும் எருமை தான் இருக்க வேணுமானா அதை ஓட்டிட்டு போ...” என்று நந்திதா சக்தியை வெறுப்பேத்த...
“உன்னோட எருமை உன் பிள்ளைய வெச்சிகிட்டு அங்க காத்துகிட்டு இருக்கு.நீ போய் அவரைப் பாரு... ரொம்ப நேரமா என் பொண்டாட்டிய காணோம்னு தேடிட்டு இருக்காரு ஓடு ஓடு” என்று அவளை விரட்டினான்...
நந்திதாவோ அவனை முறைத்து பார்த்துவிட்டு...
“மச்சானு ஒரு மட்டு மரியாதை இல்லாம எருமைனு சொல்லுற... இரு உன்னை அவருகிட்ட போட்டு கொடுக்குறேன்” என்று செல்லிக்கொண்டே, இங்கிதம் தெரிந்து அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்...
சக்தி"ம்மா..குடிக்கப் பால் மட்டும் சூடு பண்ணி தாங்க. நான் என்னோட ரூமுக்கு போறேன்" என்று நகர்ந்துவிட்டான்...
இவன் ஒருத்தன் அந்த மூனாவது மாடி ரூம்ல என்னதான் இருக்கோ தெரியலை...இங்க வந்தா எப்பவும் அங்கதான் இருப்பான்...சுத்தி செடிகளோட...அவனும் அவன் ரசனையும்” என்ற நிலா...பால் ட்மளரை ஷன்மதியின் கரத்தில் கொடுத்து அனுப்பிவிட்டாள்.
மேல படியேறி வந்த ஷன்மதி கண்டது...செடிகளுக்கிடையில் கல்பென்சில் அமர்ந்து மனைவியின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சக்தியைத்தான்..
அங்குச் சுற்றிலும் பூக்களும் செடிகளும் சுற்றி வைத்திருக்க... இரு அறைகள் மட்டுமே அங்கு இருந்தன...அது முழுவதும் சக்தியின் பயன்பாட்டுக்கு மட்டுமே...
அந்தச் சூழலே அவ்வளவு ரம்மியமாக, மயக்கும் இதமான நறுமணத்தோடு இருக்க, மெதுவாக வந்தவள் பால் டம்ப்ளரை சக்தியிடம் நீட்டவும், தன் தலையைச் சரித்து அதை வாங்காமல் புன்னகையுடன் அவளையே பார்த்திருக்க, அவனது பார்வை சந்திக்க முடியாமல் தன் தலையை லேசாகத் திருப்பிச் செடியை பார்க்கின்ற சாக்கில் நின்றிருந்தாள்...
மெதுவாகப் பாலை வாங்கியவன் அவளை இழுத்துத் தன்னருகில் அமரவைத்தவன், பாதிப்பாலை குடித்து மீதியை அவளிடம் நீட்ட, வாங்கியவள் மெதுவாகக் குடிக்க ஆரம்பிக்கவும், அவள் உடுத்தியிருந்த லேசான சேலையினூடே தெரிந்த இடையைப் பிடிக்க, பதறியவளின் கையிலிருந்த பால் சிந்தி அவளது கழுத்தின் வழியே வழிய...தனது நாவின் உதவியால் துடைத்தெடுத்துக் குடித்துவிட்டான் சக்தி...
உணர்வுகளினால் ஷன்மதியின் தொண்டைக்குழி ஏறியிறங்க...பித்தனாய் மாறி அவளது ஆடை நனைத்த பால் வழிந்துசெல்லும் இடம் தேடி இடைவரை வந்தவன் ...வயிற்றின் நடுவே சிறிது தேங்கி நின்ற பால் குளத்தை நாவினால் துளாவி குடிக்க,
அவனது பின் தலை முடியை அழுந்தப்பற்றி,
உடலின் நடுக்கத்தைத் தாங்கினாள்...
இனி தாங்காதென்று அப்படியே அவளைத் தூக்கியவன் தனதறைக்குள் நுழைந்தான்...
ஷன்மதியை இறக்கிவிட்டவன், அப்படியே சுவரில் சாய்ந்து நின்றான்..ஷன்மதி அப்போதுதான் அந்த அறையை சுற்றி நோட்டம்பார்க்க...
அப்படியே வாயைப்பிளந்து நின்றுவிட்டாள்...கட்டிலின் நடுவே பூக்களால் அழகாக அலங்காரம் செய்திருந்தது...டிம் கேண்டில் லைட்...பிளஸண்ட் ஸ்மெல்...சுவரில் எல்லாம் இதயவடிவ வாழ்த்து அட்டைகள்...
அதைப் பார்த்ததும் ஷன்மதி ஓடி வந்து சக்தியைக் கட்டிக்கொண்டவள், அவனின் முகமெங்கும் முத்தச்சாரல்களைத் தெளிக்க...அவள் இடையோடு கைக்கொடுத்து தூக்கி தனக்கு வாகாக நிறுத்தி அந்த முத்தங்களைப் பெற்றுக்கொண்டான்...
அவளது முத்தங்களின் எண்ணிக்கை நின்றதும்...அப்படியே மெதுவாக நகர்ந்து கட்டிலில், அமர்ந்து தன்னுடைய மடியில் அவளை இருத்திக்கொண்டான்...
மதி என்று அழைக்க மதியோ இப்போது மதிமயக்கத்தில்...சக்தியின் அருகாமை தந்த கிறக்கமும் மயக்கமும், அவளை வேறு எதையுமே சிந்திக்கவிடவில்லை...
"இந்த இடம்பிடிச்சிருக்கா...மதி"
“ரொம்ப” என்று கைகளை விரித்துச் சொன்னவளின் பன்னீர் ரோஜா இதழ்களை தேன் குடிக்கவென வண்டாகக் கவ்வியிருந்தான்...அவளோ அவனின் செயலை ரசித்துக் கண்களை மூடியவள்...அப்படியே பின்பக்கமாகச் சாய, தன் கரங்கொண்டு அவள் பின் கழுத்தை அழுத்தி பிடித்தான்...
ஒரு கட்டத்தில் அவளை மெதுவாக விடுத்து...
“எப்படி நம்ம ரூம்...நேத்து உங்கப்பா ஏற்பாடு செய்திருந்ததைவிட நல்லயிருக்கா...” என்றவனை, கட்டிலில் தள்ளியவள்
“லூசாடா நீ எப்பவும் என் டாடி செய்றதைக் குறை சொல்லிட்டு...இனி எதாவது சொன்ன கடிச்சிவச்சுறுவேன் பார்த்துக்க...” எனப் பொறுமினாள்.
“கடிச்சு வைப்பியா? எங்க கடிப்ப...?” என்று கேட்டவன் அவளைக் கீழே தள்ளி மேலறியவன்...
“அடியே சண்டிராணி பார்த்தன்னைக்கே, தோணுச்சுடி...இந்த சண்டிக்குதிரையை அடக்கணும்னு...” என்றவன்.
“அப்படியே பச்சக்னு இங்க ஒட்டிக்கிட்ட” என்று தனது நெஞ்சை சுட்டிக் காட்டியவன், அவளது இரு கைகைளையும் தலைக்குமேல் தூக்கி ஒன்றாகப் பிடித்துவைத்துவிட்டு, “கடிச்சு வைப்பேனா சொன்ன” என்று திமிறியவளின் பெண்மையும் சேர்ந்து திமிறி துள்ளவும் கடித்துப்பிடித்துக்கொண்டான்...
செந்தாமரை மேனியாள் துடிக்க இருபக்கமும் கடித்து வைத்தவன்...மெதுவாக அவளது கையை விடுவித்தான்,
“ரொமாண்டிக்கா இருக்கவேண்டிய நேரத்துல திமிறிக்கிட்டு வர்ற அதான்” என்று சிரிக்க...
எழுந்தவள் "போடா பர்ஸ்ட நைட்டும் ஒன்னும் கிடையாது... கடிச்சது வலிக்குது” என்று தடவிக்கொண்டே பேசியவளின் கையைப் பிடித்து " ரொம்ப வலிக்குதா ,நான் வேணா தடவிவிடுறேன்” என்று கையைக்கொண்டு போக
"திருடா...யாரு நீ தடவி விடப்போற...ஒன்னும் வேண்டாம் போ"
“புருசனை மரியாதையில்லாம பேசுற...டா போட்டு பேசுற, என்னடி நினைச்சிட்டிருக்க” என மிரட்டுகிறேன் என்ற பேரில் அவளைக் கொஞ்சிக்கொண்டிருந்தான்...
" இயந்திரத்தனமா இல்லாம இயற்கையா இருக்கு இந்தச் சூழல், மாடியில இவ்வளவு பெரிய பூந்தோட்டம், அதனோட வாசம்...இந்த ரூம்ல உன்னோட வாசம் மட்டுமே நிறைஞ்சிருக்கற மாதிரி இருக்கு” என்று உணர்ந்து பேசியபடியே..."சக்தி ஐ லவ் யூ டா" சத்தமா சொன்னாள்.
சக்தி அவளது கண்களையே ஊடுருவிப பார்த்தவன்...
“இதை சொல்றதுக்கு இவ்வளவு நாளாகிருக்கு உனக்கு..ம்மா..”
சிறிது நேரம் சரிந்துப்படுத்தவாக்கிலயே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டேயிருக்க...
மெதுமெதுவாக நகர்ந்து அவளது சேலையை விலக்க, அவளோ கைகளால் தடுக்க...
நக்கலாகச் சிரித்தவன் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணடிக்க, இப்போது தனது கண்களை இறுகமூடிக்கொண்டாள்...
அவ்வளவுதான் சேலை எங்கப்போச்சுதுனு தெரியாது " ஏன்டி அதான் இன்னைக்கு என்ன நாள்னுத் தெரியும்ல, அப்புறம் எதுக்கு இத்தனை ட்ரஸ் போட்டுவந்திருக்க...இதக் கட்டுறதுக்கே எனக்குப் பாதி வேலையா இருக்கும் போல...ஒத்தையா எதாவது போட்டுட்டு வந்திருக்கவேண்டியதுதான” என்று அலுத்துக்கொண்டான்...
“ஆபிசர் புத்தி தப்பாவே யோசிக்குது இன்னைக்கு” என்று கவிழ்ந்துப்படுத்தக்கொண்டு சிரித்தவளின் மேனியில் வெறும் உள்ளாடைகள் மட்டுமே...
அப்படியே அவளின் முதுகின் மேலயே படுத்து எச்சில் வைத்து முத்தமிட...அவனின் அந்தப் பெரியமீசை முடிகள் தனது சேட்டையைச் செய்துக்கொண்டே அந்த ஆடைக்கும் விடுதலைக்கொடுக்க..
அந்தக் கூச்சத்தில் நிமிர்ந்தவளின் கொத்து மலர்மேடுகளின் மேலயே சக்தியின் தலை வைத்திருந்தான்...அவ்வளவுதான்...பல நாள் பட்டினியாகக் கிடந்தவனுக்குப் பால்பாயசம் கிடைத்ததுபோல வாயாலயே உறிந்தெடுத்துவிட்டான்...
அவனது கைகளோ அவனுக்கு டென்சன்போக்கும் ஸ்மைலிபாலாக நினைத்துப் பிசைந்துக்கொண்டிருந்தது...
மொத்தமாக அவனது கைகளினால் கனிந்து மலர்ந்து துடித்தவள், சக்திக்குத் தன்னுடலில் சுகமெங்கெங்கு என வழிகாட்டி தானும் பெற்று அவனுக்கும் வழங்கிக்கொண்டிருந்தாள்...
மதி முழு மதியாக சக்தியின் கைகளுக்கும், கண்களுக்கும் இன்பத்தை வழங்கிக்கொண்டிருந்தாள்...
சக்தியின் சில நேர அழுத்தங்களை மெல்லினாள் தாளாது துடிக்க, சக்திக்கோ அது இன்னும் வேகத்தைக் கொடுத்தது...
தனது தலையை மெதுவாக, கிழாகப் பென்னுடலில் நகர்த்திக்கொண்டுவர...அவனது உதடுகளும், நாவும் அவளது தேகத்தில் எச்சில் கோலம்போட்டுக்கொண்டே இறங்கியது...
பெண்ணவளின் இருக்கோ இல்லையோ என்ற இடையில் வந்து சிறிது இளைப்பாறியவனின்...உடலின் எல்லா நரம்புகளும் வீணை மீட்டினது போல விரைத்துக்கொண்டு, மனையாள் ஒட்டுமொத்தமாகத் தனக்கு வேண்டும் என்ற உணர்வைத்தர...நிமிர்ந்து மனையாளைப் பார்க்க...
இரு கைகளையும் நீட்டி அவனை அழைக்க உடையில்லா அவளது உடலில் சாரையெனப் பிண்ணிக்கொண்டான்...
உயிருக்குள் உயிர்த்தேடி, அவளுக்குள் தன்னைத் தேடி நுழைந்துக்கொள்ள...
உயிரானவனைத் தனக்குள் ஏற்றுக் கொண்டவள்... அவனுக்கு இசைந்துக்கொடுக்க...சக்தியின் இயக்கம் வேகமெடுக்க, பூமேனியாள் தாங்காது அவனது கைகளை அழுத்திப்பிடிக்க...
கைகளை விலக்கி அவளை அப்படியே, அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்...
உயிருக்குள் உயிர்த்தேடி...
தேகம் இரண்டும் உரசிக்கொண்டு...
பற்றியெறிந்த மோகத்தீயின் ஒளி வெள்ளத்தில்...
இணையிரண்டும் சுகத்தின் லயம் தேடி
ஈருயிர் ஓருயிராக உருமாறி
இன்ப ஸ்வரம் படித்தனர்...
களைத்து படுத்திருந்தவனின், நெஞ்சின் முடியை தனது கையினால் பிடித்து விளையாடிக்கொண்டே அவனின் அருகில் படுத்திருந்தவளின் கையைப்பிடித்த முத்தமிட்டவன், சரிந்து படுத்து "மதி" என்றழைக்கவும் நிமிர்ந்து கணவனின் முகம் பார்க்க, நிறைவான காதலோடு மனைவியின் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன் நெற்றியில் முத்தம் வைத்தான்...
புன்னகையுடன் அவனின் மீதேறி படுத்துவிட்டாள்...சக்தியின் உயரத்திற்கும் வலிமைக்கும் முன் அவள் வெறும் பூனைக்குட்டிதான்...இப்போது இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில்.
கிராமம் என்பதால் அதிகாலை நான்கு, ஐந்து மணிக்கே பறவைகளின் சத்தம்கேட்டு விழித்த சக்திதான், எழும்பி பார்க்க மனையாளைக் காணவில்லை....
என்னவென்று பார்க்க கீழே படுத்திருந்தாள், அவளருகில் சென்றவன் பார்க்க வெற்றுத்தரையில் படுத்திருந்தாள்...
மதி என எழுப்ப அவனின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, தன்னோடு இழுத்துக்கொண்டாள், சும்மாவே சக்தி வாய்ப்புக் கிடைக்குமாவென்று காத்திருப்பான்...இப்போ சும்மா விடுவானா என்ன...
அரைகுறையாகச் சுற்றிருந்த ஆடையும் விடுபட்டிருந்தது ஷன்மதி...
“ஹேய் சக்தி டேர்ட்டி பையா...நீ ரொம்பப் பண்ற” எனச் சிணுங்க...
“ரொம்பதான் பண்ணனும் இல்லைனா...வேற மாதிரி சொல்லுவாங்கடி” எனப் பேசியவனின் வாயைக் கடித்து வைத்து “எப்போ பாரு வேற அர்த்தத்திலயே பேசுறது...”
“சரி இனி வேற அர்த்தத்துல பேசலை...செய்றேன்” என்றவனின் கையில் வசமாக மாட்டிக்கொண்டாள் ஷன்மதி...மறுபடியும் அவனது தீரத்தை அவளிடம் காண்பித்துத் தங்களது இல்லற வாழ்க்கையை இனிதாகத் தொடர்ந்தனர்...
காலை பத்து மணி தாண்டியும் இருவரும் எழும்பி வரவில்லை என்றதும் நிலா தனது மகனுக்கு அழைத்தார்...
போனின் அழைப்புச் சத்தம் கேட்கவும் எங்கே என்று தேடியவன் டேபிளில் இருக்கவும் அவசரமாக எடுத்துப்பேசினான் "சீக்கிரம் கிளம்பி கீழ வாங்க, சொந்தக்காரங்களாம் உங்கிட்ட சொல்லிட்டுப் போகிறதுக்காகக் காத்திருக்காங்க” என்றதும்...அவசரமாக எழும்பியவன் மனைவியை எழுப்பவும்,
“போடா ஆபிசர் முடியலை தூங்குறேன்,தூக்கம் தூக்கமா வருது” என்க...
தலையிலடித்துக்கொண்டவன்,
“இப்போ நீ வரலை நேத்து மாதிரி தூக்கிக்கொண்டு தண்ணில போட்ருவேன்” என்றதும் அடிச்சுபுரண்டு எழும்பியவள்...
கண்களை மூடிக்கொண்டு...
“காலையிலயே நல்லத்தரிசணம்...ட்ரஸ்ஸப்போடுங்க” என்றவளைத் தூக்கியவன்
“ குளிச்சுட்டு வந்துப்போட்டுக்கலாம்” என்று அவளை இழுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்...
மணி பதினொன்றை நெருங்கிய வேளை இருவரும் இறங்கிவர எல்லோரும் மௌனமாகக் குனிந்து சிரிக்க...அதைக்கண்டு கொள்பவனா சக்தி,
சாப்பாட்டு அறைக்குள் சென்று....
“நிலா ஆணி சாப்பாடு எங்க?” எனச் சத்தமாகக் கேட்டான்...
கதிர் "பாரு உன் பேரை எப்படிக் கூப்பிடுறான்...எவ்வளவு வளர்ந்தாலும் அவன் மாறமாட்டான்...போ"
நிலா" எவ்வளவு வளர்ந்தாலும் உங்க இரண்டுபேரோட பனிப்போரும் நிக்கப்போறதில்லை...” என அலுத்துக்கொண்டே சக்தியிடம் சென்றவள்...இருவருக்கும் சாப்பாடு பரிமாறியபடியே பேசிக்கொண்டிருந்தாள்...
உண்டு முடித்து முன்னறைக்கு வந்தவன்" நாங்க நாளைக்கு ஹைதரபாத்திற்குப் போறோம்...மதி என்கூடக் கொஞ்ச நாள் இருக்கட்டும்"
எல்லோரும் “என்ன சொல்றான்...இங்க படிக்கறதுக்கு விட்டுட்டுப் போறதா தான சொன்னான்...இப்போ என்ன இப்படிச் சொல்றான்” என்று பார்த்திருக்க...ஷன்மதிக்கும் இது புதிய செய்திதான்.
அத்தியாயம்-10
சக்தி ஷன்மதியை அவனுடனே அழைத்துச் செல்கிறேன் என்றதும் கதிருக்குக் கோபம் வரத்தான் செய்தது "படிக்கின்ற பிள்ளையை அவசரம் அவசரமாகக் கல்யாணம் பண்ணிட்டு, இப்போ அவன்கூடவே அழைச்சுட்டுப் போறேனு சொன்னா, அந்தப் பிள்ளையோட படிப்பு என்ன ஆகும்...
அவங்க அப்பா நம்மளை பத்தி என்ன நினைப்பாரு" என்று நிலாவிடம் சத்தமிட, நிலாவோ திரும்பி மகனைப் பார்க்க...
“ஏற்கனவே அவங்க காலேஜ் பிரின்சிபால் கிட்ட எல்லாம் பேசிட்டேன்... அவ இப்போ அங்க இருக்கணும்னு அவசியம் இல்ல. எக்ஸாம் மட்டும் வந்து எழுதிட்டுப் போனா போதும்... நீங்கள் இவ்வளவு யோசிக்கும் போது என் மனைவி பற்றி நாம் யோசிக்க மாட்டேனா என்ன?”
முதன்முதலில் ஷன்மதியை பொண்ணு கேட்டு வீட்டிற்குப் போகும்போது ஷ்ரவன் திருமணத்தைத் தள்ளிவைக்கப் பேசிய உடனே கல்லூரிக்கு அழைத்து எல்லா விவரங்களையும் கேட்டிருந்தான்... மாமனார் வேண்டுமென்றேதான் ஆறு மாதம் திருமணத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டான்... எனவே வேறு விதமாகத் திட்டம் தீட்டி ஷன்மதியை கல்யாணம் செய்து கொண்டான்...
ஷன்மதி இதைக்கேட்டதும் .”அப்போ நம்மாளு எல்லாம் விசாரிச்சுட்டு தான், பிளான் பண்ணியிருக்காங்க”, என்று சிறிது நிம்மதியானாள்...
ஷன்மதியோ “இப்பொழுது டாடியை எப்படிச் சமாளிக்குறது, அவங்கிட்ட என்ன பதில் சொல்ல” மனதிற்குள்ளாகவே யோசனை செய்துக்கொண்டிருந்தாள்...
“என்னமோ செய்யுங்க ஆனா குடும்பத்தில் பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கோங்க” என்று கதிர் எழுந்து சென்றுவிட்டார்...
சக்தி அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை...
சத்தமாகவும் பேசமுடியாது, கால்யாணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில் பேசும்படியாகிவிடும் என்று கதிரும் வேறு ஒன்றும் சொல்லவில்லை...
ஷன்மதிக்கு சக்தியிடம் பேசினால் நன்றாகயிருக்கும் என்று பார்த்தால், அவர்களிருவருக்கும் தனிமையும் கிடைக்கவில்லை...என்ன செய்யவென்று யோசித்துக்கொண்டே இருந்தவளுக்குப் போனில் அழைப்பு வரவும், தங்களது மாடி அறைக்குச் சென்று பேசினாள். ஹரிதாதான் தாயாக மகள் எப்படியிருக்கின்றாளோ என அறிந்துக்கொள்ளவென்று அழைத்திருந்தாள்...அப்படியே பேசிக்கொண்டிருக்கும் போதே சக்தி பின்பக்கமாக இருந்து அவளது இடையோடு
கையிட்டு அணைத்துக்கொண்டவன், அவளது தோளில் முகம் புதைத்து நின்றான்...
ஹரிதா மகளிடம் பேசிக்கொண்டிருக்க “டாடி எங்கம்மா டாடிகிட்ட போனை கொடுங்க, அவங்க கிட்ட பேசுறேன்” என்று ஷன்மதி கூறவும்...
“இருடா கொடுக்கிறேன்” என்று ஹரிதா போனை ஷ்ரவனுக்கு மாற்றிக் கொடுக்கும்போதே, இங்கோ சக்தி "மதி" எனறு கிறக்கமாக அழைத்தவன் அவளது உதடுகளைக் கடித்துதனது வாய்க்குள் வைத்திருந்தான்...
அவளோ ஒன்றும் செய்ய இயலாமல் கண்களை விரித்து நிற்க, அப்படியே மெதுவாக அவளது கைகளைப் பற்றியவன், அவள் கையில் இருந்த மொபைலை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, மெதுவாக அவளது உதடுகளை விடுவித்தான்...
“என்ன பண்றீங்க பேசிட்டிருக்கும்போதே இப்படித்தான் கடிச்சு வைப்பாங்களா?” உதட்டினைத் தடவிக்கொண்டே கேட்டவளிடம். “பேசிட்டிருக்கும்போது கடிக்ககூடாதா...ஓகே டன் இனி பேசாமல் இருக்கும்போது கடிச்சு வைக்கின்றேன்” என்றவன், அவளது கன்னங்களில் கடிக்கப்போக அவனது நெஞ்சினில் கைவைத்து தடுத்தாள்.
அதற்குள் சக்தி " ஹேய் வந்த விசயத்தை மறந்திட்டேன் பாரு, நீ பக்கத்துல வந்தாலே எல்லாம் மறந்திடுது, வா உன்னை ஒரு இடத்திற்குக் கூட்டிட்டுப்போறேன்" என்று அவளது கையைப் பிடித்து அவசரமாகக் கீழே அழைத்துச் சென்றவன் தனது என்பீல்டு வண்டியை எடுத்ததும்...
“வாவ் உங்ககிட்ட இந்த வண்டியிருக்கா? சூப்பர்...நான் ஓட்டட்டுமா?”
“இங்கயா? அதுவும் இப்படிச் சேலைக் கட்டிக்கிட்டா...சரிவராது...நீ பின்னாடி ஏறி உட்காரு” என்றவன் உள்ளே பார்த்து "ம்மா, நான் தோப்பு வீட்டிற்குப் போறேன், இராத்திரிக்கு சாப்பாடு கொடுத்துவிடுங்க"எனச் சொல்லிவிட்டுக் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.
ஷன்மதியிடம் பேசுவதற்கு ஆசையாக ஹரிதாவிடம் போனை வாங்கிய ஷ்ரவனுக்குப் போனில் அமைதியே பதிலாக கிடைக்க...திரும்பவும் மகளுக்கு அழைக்கப் போன் சுவிட்சுடு ஆஃப் என்ற பதிலே திரும்பத் திரும்பக் கிடைக்கக் கோபத்தில் போனை தூக்கி எறிந்துவிட்டான்.அது சுவற்றில் பட்டு தெறித்து உயிரற்றுபோனது...
ஷ்ரவனுக்கு அவ்வளவு கோபம் சக்தி மீது மகளைத் தன்னிடமிருந்து வேண்டுமென்றே பிரிக்கின்றான் என்று...
ஷ்ரவனைச் சாமாதானப்படுத்தினாள் ஹரிதா...
“புதுசா கல்யாணமானவங்க அதுவும் லவ் பண்ணி...புரிஞ்சுக்கோங்க தனியா இருப்பாங்க...அதனால போனை அணைச்சு வச்சுருப்பாங்க...அது அவங்க வாழ்க்கை”
ஷ்ரவன் " இல்லடா, அவன் வேணும்னே செய்யுறான், நீ பேசும்போது நல்லாதான பேசினா, போனும் நல்லாதான இருந்துச்சு, அதெப்படி நான் பேசும்போது மட்டும் கேட்காம போகுது" எனச் சிறுபிள்ளைப்போல மனைவியிடம் புகார் வாசித்தான்.
ஹரிதாவிற்கோ இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்...
இந்த மாமனார் மருமகன் ஈகோ பிரச்சினை என்னைக்கு முடியுமோ தெரியலையே ஆண்டவா... என மனதிற்குள் நொந்து கொண்டாள்.
அங்கோ சக்தி ஷன்மதியை வண்டியில் அழைத்துக் கொண்டு சென்று இறங்கியவுடன்... அங்கிருந்த தோப்பையும், அந்த வீட்டினையும் பார்த்த ஷன்மதிக்கு அவ்வளவு ஆச்சரியம்...
தோப்பின் நடுவே வீடு, அதைச் சுற்றிலும் இயற்கையான சூழல்... “ஹனிமூன் பேக்கேஜ் போட்டு வெளியூறு போயிருந்தா கூட இவ்வளவு அழகா இருந்திருக்காது இல்ல சக்தி" எனப் பேசியவளுக்குத் தன் தகப்பனின் வீட்டு எண்ணங்கள் பின்னுக்குச் சென்றுவிட்டது...இதைத்தான் சக்தியும் எதிர்பார்க்கின்றான்.
ஷ்ரவனிடம் பேசப்போகின்றாள் என்றதுமே, அவளுக்கு முத்தமிட்டவாறே போனை வாங்கியவன் சிறிது நிமிடங்கள் அப்படியே அழைப்பில் வைத்திருந்து அணைத்து வைத்துவிட்டான். அவளது எண்ணங்களைத் திசைத்திருப்பவே இங்கு அழைத்து வந்திருந்தான்...
யாருக்கு அதிக உரிமையும் பாசமும் ஷன்மதியிடம் உள்ளது என்பதைக் காண்பிக்கும் போட்டி மாமனாருக்கும் மருமகனுக்கும்...போட்டி ஆரோக்கியமான போட்டியாக முடியுமா? கடவுளுக்கே வெளிச்சம்?
சக்தி வீட்டைத் திறந்து உள்ளே செல்ல வெளியவே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவளை "மதி" என்றழைக்க, திரும்பியவளை பார்த்து வா எனச் சைகை செய்ய ஓடி வந்தவள், அவனைக் கட்டிக்கொண்டாள்...
அப்படியே உள்ளே தூக்கிக்கொண்டு சென்றவன் " ஓய் பொண்டாட்டி"
" என்னடா புருசா"
"அடிங்க என்னடா புருசாவா...வரவர வாய்க்கூடிப்போச்சுது" எனக் கீழே இறக்காமலயே சொன்னவன்.
"எனக்கு டா போட்டுப் பேசுறது பிடிக்காதுடி"
"அதுக்கு என்னடா பண்ணனுங்கற"
அவளை முறைத்துப் பார்க்க, அவள் தலையைச் சரித்து அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
"சிரித்து மயக்காதடி மாயக்காரி...
செய்யாதனு சொல்றதைத்தான் செய்வியா நீ"
"சொல்லாததையும் செய்வேன்டா என் போலிஸ்காரா” என்றவள் அப்படியே அவனது மீசையை இழுத்தவள், அவனது முரட்டு உதடுகளைத் தன் மெல்லிய உதடுகளால் கடித்து முத்தம் வைக்க, மெதுவாக அவளை இறக்கியவன், நின்றவாக்கிலயே அவளது இடையைப்பற்றிக்கொண்டிருந்தான்.
ஷன்மதியோ முத்தத்தின் நேரத்தை நீட்டிக்கொண்டு, அவனது பற்களோடு சண்டையிட்டு இப்பொழுதுதான், தனது நாவினை சுழற்றி அவனது நாவினைத் தேடி பிணைத்துக்கொண்டு வண்டுவிடம் தேனைத்தேடும் பூவானாள்...
மெதுவாக அவனிடமிருந்து தன் வாயினைப் பிரித்தெடுத்து, தலைசாய்த்து “எப்படி நம்ம முத்தம்?” என்று புருவம் உயர்த்தி, இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்க...
சிறிது உதடு நெகிழ்க்கும் புன்னகையுடன், தனது உதட்டினை தடவிக்கொண்டு அவளிடம் நெருங்க...
ஷன்மதியோ “ஐயோ சிங்கத்தைச் சீண்டிட்டமோ” என இப்போது தான் முழித்துக்கொண்டு நின்றிருந்தவள்...எங்கு செல்ல என்று இடம்பார்க்க, அதைப் புரிந்துக்கொண்டவன்...
“இங்கயிருந்து எங்கயும் தப்பிக்க முடியாது” என்று சத்தமாகச் சிரிக்க அந்தத் தனிமையான இடத்தில் சக்தியின் சிரிப்புத் தனியாகக் கேட்க... “ஐயோ பூச்சாண்டி” என்று கண்ணை மூடிக்கொண்டாள்.
“என்னைப் பார்த்தா உனக்குப் பூச்சாண்டி மாதிரி இருக்கா” என அவளை எட்டிப்பிடித்தவன்... இழுத்துக்கொண்டு உள்ளறைக்குச் சென்றான்.
மாலை மயங்கும் நேரமாதலால் ரம்மியமானதொரு சூழல், ஏகாந்த வேளை கட்டிலில் சக்தி சாய்ந்து படுத்திருக்க, அவனின் மேல் சாய்ந்து ஷன்மதி படுத்திருக்க இதமான தென்றலின் குழுமை உலகத்தையே மறக்கச்செய்தது...
சக்தி மதியை இழுத்து சரிந்துப் படுக்கவைத்தவன் "எனக்காவது உன்னைப் பார்த்ததும் பிடிச்சது, ஆனால் நான் எதுவுமே சொல்லாமல் எப்படி என்மேல ஆசை வந்துச்சு, உன் பார்வையே உன் காதலை என்கிட்ட உணர்த்திச்சு, அதனாலதான் நான் நெருங்கி வந்தேன்..நீ எப்படி நெருங்கிவந்த சண்டிராணி"
ஷன்மதி"தெரியலை, அந்த முதல் நாள் பிரச்சனைக்குப் பிறகு, உங்க எண்ணம்தான் மனசுக்குள்ள ஓடிக்கிட்டேயிருக்கும், நீங்க நம்பர் தந்ததும் எனக்கு நீங்க என்னை விரும்புறீங்கனுப் புரிஞ்சது, ஏன்னா உங்க பெர்சனல் நம்பர் எங்கத்தேடியும் கிடைக்கலை, எனக்கு நீங்க பெர்சனல் நம்பர் தந்தீங்க, அப்போ நான் உங்களுக்கு ஸ்பெஷல் தான, அதுவும் இந்த விஷ்ணு பையன் உங்கிட்ட பேசக்கூடாதுனு சொன்னான்...அப்போ பேசாம இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது, நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்னும் புரிஞ்சது, அதுதான் அன்றைக்குச் சேலைக்கட்டிவிடும்போது, நீங்க கிஸ் பண்ணினதும் வித்தியாசமாகத் தெரியலை, என்னோட சக்தி என்ற உரிமைதான் வந்துச்சு"
சக்தி "ஓ...இதுல இவ்வளவு இருக்கா"
மதி "ஆமா" எனத்தலையிட்டினாள்.
அப்படியே அமைதியாகவே இருந்தனர்...சக்தியின் கரங்கள் மெதுவாக இறங்கி அவனுக்குத் தேவையானவற்றைத் தேடி இறங்க...
கூச்சத்தில் நெளிந்தவளை சரித்து அவளது கண்களில் முத்தம் வைக்க, மதி கண்களை மூடிக்கொள்ள...அவளது இருபக்கமும் கைகளை ஊன்றி அப்படியே நிற்கவும், கணவன் என்ன செய்கின்றான் எனக் கண்களைத் திறந்தவள் கண்டது, தன்னையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனைத்தான்...
கண்கள் நான்கும் கவிப் பேச
உயிர் மூச்சுக்கள் கலந்துருக
உடலுக்குள் உயிரைத்தேட
ராஜசுகம்....
கண்களோடு கண்கள் கலந்துறவாடினவன், கன்னங்களில் கடித்து இழுத்து வாய்க்குள் வைத்து ,எச்சில் வைத்து விடுவிக்க, மறு கன்னத்தையும் காட்டினாள், அவனோ அவளைச் சீண்டுவதற்காகக் கொஞ்சம் லேசாகக் கடித்து வைக்க...ஸ்ஸ்.
என்று வலி பொறுத்தவளின், இதழ்களை, சக்தி தனது நாவினால் தேடவும், பூவிதழ்களை லேசாகத் திறக்க அதுவே அவனுக்குப்போதுமாக இருக்க, வாயினுள் நுழைத்து தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சிப்போல உறிந்துக்கொண்டிருந்தான்...
உணர்வினைத் தாங்காது அவளது மேனி துடிக்க, அவளது ஸ்தனங்கள் ஏறியிறங்கியது...
கழுத்தில் முத்தம் வைக்க,மீசையின் குறுகுறுப்பில் சிரிக்காரம்பித்தவள் "சக்தி மீசை கிச்சு கிச்சு மூட்டுது பாருங்க” என அவன் தலையைத் தள்ளிவிட, பக்கவாட்டில் சரிந்தவன்...
அவளது சேலையை விலக்கி எடுக்கக் கைக்கொண்டு நெஞ்சினை மறைத்தாள், அவளின் மேலேறி அமர்ந்து கொண்டான் சக்தி...
அவனோ சட்டையை அவிழ்க்க அவசரப்பட, அதுவோ அவனுக்கே தண்ணிக்காட்டியது, பியத்து எடுக்கப்போக, தடுத்தவள் தானேக் கழற்றினாள்...
கொண்டவனுக்கே உரிமையான மின்னும் தங்க கலசங்கள், கிரீடங்களுடன் தெரிய...
கைகளில் பற்றியவன் நாவினையும் உதட்டினையும் எச்சில் படுத்திக்கொண்டு அப்படியே வலதுகரத்தால் ஒன்றைப் பிடித்து மொட்டுக்களைத் தட்டும் வண்டுபோலத் தனது நுனி நாக்கினால் கிரீடத்தைத் தொட, குளுமையும் சூடும் சேர்ந்த சக்தியின் நுனி நாக்கு பட்டதும்...
மதி தனது வாயைத்திறந்து " ஹா" என்று முணங்க...
சக்திக்கு அந்தச் சத்தம் இனிமையாக இருந்ததுபோல மொத்தமாகத் தனது வாய்க்குள் வைத்து சுவைக்கப்பார்க்க, அது அவன் கைக்கே அடங்கவில்லை, வாய்குள்ளாகவா அடங்கும்...
அமுதுண்ணும் சிறுபிள்ளை, இல்லையென்றதும் முட்டுவதுபோல முட்டி மோதி வாய்க்குள் வைத்துச் சுவைத்தான்....
இருபக்கமும் மோதிவிளையாடியவன், மீண்டுமாக வழிதெரியாதவனைப்போல,
அவளது அதரங்களைக் கடித்து இழுத்து சுவைக்க,
ஷன்மதியோ அவனின் செயல்களுக்கெல்லாம் தயக்கமின்றி இடங்கொடுத்தவள், கணவனின் தோள்களைப் பற்றிக் கீழிறக்கி வழி சொல்ல...புரிந்தவன் அவளது இடையில் இளைப்பாறி, வயிற்றினைக் கடித்திழுத்து வைக்க,கைக்கொண்டு அவனது தலையில் அடித்தாள்....
“வலிக்குதுடா..மெதுவா கடி” என்று...உதட்டினாலே சிற்றிடையே அளந்தவன்...
அப்படியே தலையைக் கீழேக்கொண்டு சென்று முத்தம் வைக்கச் சிலிர்த்தவள், அவனது கேசத்தைப்பற்றிக்கொண்டாள்...
மீண்டும் மேலே வந்தவன் இன்னும் பசியடங்காதவன் போல அவளது மேனியில்
தாமரை மொட்டுக்களைக் கைகளால் தாங்கினான்...
இருவரும் பிறந்தமேனியுடன் ஒருவருக்குள்,ஒருவர் சுகம்தேடி அலைய...இப்போது ஷன்மதியோ சக்தியின் உடம்பில் தனது பூவிதழால் ஒத்தடம் கொடுத்தும், நாவினால் தீண்டியும் விளையாடியவள்,ஒருக்கட்டத்தில் உணர்வின் உச்சத்தில் நிமிர்ந்து படுக்க, அவளது கலசங்கள் நிமிர்ந்து என்னைத் தொடு என்று மீண்டும் சக்தியை அழைக்க அவளின் மேலேறியவன் அவளது தொடைகளின் நடுவே கால்களை நுழைத்து, பிண்ணிக்கொண்டு அவளின் பெண்மையைத் தேடி தன்னை நுழைக்க, ஷன்மதியின் உடலோ அதிர்ந்து அவனுக்கு வழிவிட...
ஷன்மதியின் தொண்டைகுழி ஏறியிறங்கியதைப்போலவே, சக்தியின் அசைவுமிருக்க...இரண்டு உடல்களின் அங்கங்களும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது, கண்கள் கிறங்க, மூளை இப்போது உடல் கொடுக்கும் சுகத்தில் மற்ற சிந்தனைகள் மறந்து ஆனந்த சந்தோசத்தில் இருந்தது....
எல்லாம் முடித்து விலகியவன் மனைவியைப் பார்க்க, சக்தியின் உடல் தந்த போதையில் கிறங்கி கிடந்தாள், அவளருகிலயே படுத்தவன் அவளைத் தன்னோடு இறுக்கி அணைக்க ஆடையில்லா உடல்களின் தீண்டல் இன்னும் சுகத்தினை ஏற்றி, சூடேற்றிக்கொண்டது...
அன்றிரவு முழுவதும் தங்களது சுகத்தேடல்களை முடித்துக் கலைத்து,களைத்துத் தூங்கியவர்களை வெளியே கதவு தட்டும் சத்தம்தான் காலையில் எழுப்பியது...
சக்தி மனைவியை எழுப்பி உடை மாற்ற சொல்லிவிட்டு...அந்த அறையின் கதைவை சாத்திவிட்டு,கதவைத் திறந்தவன் பார்த்தது...அவனது அண்ணனைத்தான் அவன் மனைவி பிள்ளையோடு தோப்பிற்கு வந்திருந்தான்...அவனிடம் கதிர் தகவல் சொல்லிவிட்டிருந்தான்.
“சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குப் போங்க...உன் மாமனார் அப்பாக்கு போன் பண்ணி பேசிருக்கார்...ஷன்மதிக்கிட்ட பேசணுமாம்” என்றவன் அந்தப்பக்கம் மோட்டாரில் குளிக்க அழைத்துச் சென்றான் தன் குடும்பத்தை...
ஷன்மதியும் உடைமாற்றி வெளியே வந்தவள்...தண்ணீர் தொட்டியை பார்த்ததும் “நானும் அதுல குழிக்குறேன்” என்று அடம்பிடிக்க, அவளைச் சமாளித்து அழைத்து வந்தான் வீட்டிற்கு...
கோபத்தில் அவனிடம் பேசாமலயே வந்தாள்...
ஷன்மதி வீட்டிற்குள் வரவுமே "உன் போன் என்னாச்சுமா...உங்கப்பா என்கிட்ட பேசினாங்க” என்று கதிர் கேட்கவும்..
ஷன்மதி"இங்கயே மறந்து வச்சுட்டுப் போயிட்டேன் மாமா"
கதிர் " உடனே அவருக்குக் கால் பண்ணி பேசிடுமா..பெத்தவங்க தவிப்பு உங்களுகெல்லாம் புரியாது விளையாட்டா இருக்கும்” என்று வார்த்தை மருமகளுக்கும்...பார்வை மகனுக்குமாக இருந்தது.
"எனக்கு வில்லனே இவருதான் " கதிருக்கு கேட்கட்டும் என்றே சத்தமாகப் பேசினான்.
அதைக்கேட்ட கதிரோ “போடா போடா நான் உனக்கு அப்பன்டா..என்கிட்டயேவா” என்று பார்த்து வைத்தன்.
ஷன்மதி தன் போனை எடுத்துப்பார்க்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது...எப்படி என யோசித்தவளுக்கு நியாபகமில்லை.
ஆன் செய்து ஷ்ரவனுக்கு அழைத்துப்பேசினாள்...
மாலை நான்கு மணிக்கு மதுரை ஏர்போர்ட்டில் ஷ்ரவன் சக்தியை நேரடியாகவே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்....
.
அத்தியாயம்-11
தோப்பு வீட்டிலிருந்து வந்ததும் தன் தந்தைக்கு அழைத்துப் பேசிய ஷன்மதி, அவர்கள் இன்று ஹைதரபாத்திற்குச் செல்வதாகக் கூறவும்...
ஷ்ரவன்"யாரு சொன்னது, நீங்க அங்க போறீங்கனு"
ஷன்மதி"உங்க மருமகன்தான்" என்றவள் அவன் சொன்ன விசயங்கள் அனைத்தையும் கூறிவிட்டாள்.
உடனே ஷ்ரவன் “சரிம்மா நான் உன்கிட்ட அப்புறமா பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்தவன்...சிறிது யோசனையிலிருந்தான்.
இங்குச் சக்தியோ ஊருக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான்...சாயங்காலம் நான்கு மணிக்குப் பிளைட் என்றவன். பக்கத்தில் என்பதால் மூன்று மணிவாக்கில் போவதற்குத் தயாராகினர்.
ஷன்மதிக்குப் போனில் அழைப்பு வர பேசியது ஷ்ரவன் மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்திறங்கிவிட்டான்...மகளைக் காண்பதற்கு. அதுதான் தகவல்...
ஷன்மதி இப்போது என்ன செய்யவென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்க...சக்தியோ “என்ன உங்கப்பா மதுரை ஏர்போர்ட்டு வந்திறங்கிட்டேனுத் தகவல் சொன்னாரா...” என்றவனைப் பார்த்து இவங்களுக்கு எப்படித் தெரியும் என நின்றாள்....
“உங்கப்பாவை எனக்கு நல்லத்தெரியும்டி உன்னைவிட, அவரை அங்கயே நிக்கச் சொல்லு அரை மணி நேரத்துல நம்ம அங்க ரீச்சாகிடலாம்...” என மனைவியிடம் கூறினான்.. குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்...
ஏர்ப்போர்ட்டிற்குள் நுழையவும் ஷ்ரவன் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்க ஷன்மதி ஓடிச்சென்று " டாடி" என்று கட்டிக்கொண்டாள்...
அவனுமே நான்கு நாட்கள் மகளிடம் பேசக்கூட முடியாதளவு இருந்ததனால்...இப்போது " ஷானு பாப்பா எப்படியிருக்க" என விசாரிக்க...
சக்திதான் இந்தக் கொசுத்தொல்லை தாங்கள என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு நின்றான்...
“வா டாடி உன்னைச் சென்னைக்கு அழைச்சிட்டுப்போறேன்...” என்க.
ஷன்மதியோ "என்னப்பா பேசுறீங்க, நான் சக்திக்கூட ஹைதரபாத் போறேனு சொன்னேன்தான உங்ககிட்ட" எனச் செல்லம் கொஞ்ச...
"சரிடா, ஆனால் எப்போ வருவ" என்று கேள்வி சக்தியை நோக்கி இருந்தது...
மதி "இரண்டு மாதம் அங்க இருந்துட்டு, எக்ஸாம் எழுத ஒரு பதினைந்து நாள் போதும்ல, அப்போ வர்றேனு சொல்லு" என்றான்...அதற்குத்தான் ஷ்ரவன் சக்தியை முறைத்துக்கொண்டு நின்றான்...
தனது தந்தையுடனே ஒட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருந்தவளைத்தான் சக்தி வைத்தக்கண் வாங்காமல் பார்த்திருந்தான்...
அப்படியொருத்தன் இருப்பதையே மறந்து தந்தையும் மகளும் பேசி சிரித்துக்கொண்டிருக்க, ஹைதரபாத் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும், எழும்பி சக்தி ஷன்மதியை அழைக்ககூடவில்லை, அப்படியே நடந்து சென்றதைக் கண்டதும்தான் ஒருமாதிரி மனதிற்குள் உணர்ந்தாள்...நான் வர்றனானுக்கூடப் பார்க்கவில்லையே என்று சிந்திக்கும்போதுதான்...அவளும் உணர்ந்தாள் இவ்வளவு நேரம் சக்தியைக் கவனிக்கவேயில்லை நம்ம, என்ற குற்றவுணர்ச்சியும் வந்தது... “வர்றேன் டாடி” என்று ஷ்ரவனுக்குப் பை சொல்லிவிட்டுச் சக்திக்குப்பின் ஓடி சென்று அவனது கையைகோர்த்துக்கொண்டு திரும்பி ஷ்ரவனையும் பார்த்து கண்சிமிட்டி சிரித்தவள்...முன்பக்கமாகத் திரும்பவும் அவளது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது, அதைத்துடைத்துக்கொண்டே நடந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தவன்...கண்டுக்கொள்ளாமல் அதே வீறுநடையுடனே நடந்துக்கொண்டிருந்தான்.
தன் மகள் கண்களைத் துடைத்துக்கொண்டே செல்வதைப் பின்பக்கமிருந்து பார்த்த ஷ்ரவனுக்கோ நெஞ்சில் இரத்தம் வராதக்குறைதான்... ‘என் ஷானு பாப்பா அழறாளே அதற்குக் காரணம் சக்திதான்’ என்று, இன்னும் அவன்மேல் வெறுப்பு வரத்தொடங்கியது ஷ்ரவனுக்கு.
அவனும் ஒன்றை மறந்துவிட்டான்...தன் மகள் வளர்ந்துவிட்டாள்...அவள் ஒரு தனி மனுஷி, அவளுக்கென்று ஒரு மனம் உண்டு, சிந்தனையுண்டு, வாழ்க்கை தனியாக உண்டு என்பதைத்தான்...
பிளைட்டில் இருக்கும்போதும் சக்தி எதுவுமே பேசவேயில்லை...அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தாள்.
தலையைமட்டும் திருப்பி அவளைப் பார்த்தவன், அழுது சிவந்த முகத்தைப் பார்த்ததும் அவனுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது...
‘அவங்கப்பா பாசத்துல ஓடிப்போய்ப் பேசினதுக்கூட தப்பில்லை...கிட்டதட்ட ஒரு மணி நேரமா நான் அங்கயிருந்ததைக்கூட என் மனைவியாக உணரலைனா...
இன்னும் ஷ்ரவனோட பொண்ணாதான் மனசுக்குள்ள இருக்காளா...பெற்றோராகப் பார்த்து வைச்ச திருமணம்னாக்கூடப் பரவாயில்லை...காதலித்துக் கல்யாணம் பண்ணிருக்கோம், எப்படி அவளால என் நினைவேயில்லாமல் இருக்க முடிகின்றது, என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை’ என்று ஆதங்கம் இருந்தது...
அவனும் அந்தப் பயணத்தை வெறுத்தான்...அமைதியாகவே இருவரும் இறங்கி காத்திருக்க, அவனது டிபார்ட்மென்ட் கார் வந்தது...இருவரும் அமைதியாக ஏறி வீடு சென்று சேர்ந்ததும்...
உணவை தருவித்து உண்பதற்கு அமரவும் நிலா அழைத்துக் கேட்டாள் “எப்போ போய் சேர்ந்திங்க?” என்று விசாரிக்கவும்.
“நீங்களாவது நான் ஒருத்தன் இருக்கன்னு நியாபகம் வச்சிருக்கீங்களே அதுவரைக்கும் சந்தோஷம்...உயிரோடத்தான் இருக்கேன்.
இங்க ஒருவொருத்தர் புருஷன் பக்கத்துல இருக்கதுக்கூடத் தெரியாம மறந்துப்போயிடுறாங்க” என்றதும், நிமிர்ந்துப் பார்த்தவள் அமைதியாக அவனைக் கண்டுக்காது சாப்பிட்டு எழும்பியவள்..
குளியலறைக்குச் சென்று ஒரு பக்கெட் நிறையத் தண்ணியை எடுத்து வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் மேல் ஊற்றிவிட்டு...இடுப்பில் கைவைத்து நின்றிருந்தாள்...
இதை எதிர்பார்க்காத சக்தியோ அப்படியே சில நொடி நின்றவன், கோபத்தில் அடிக்கக் கை ஓங்கவும் பயந்து ஒரு நிமிடம் உடலைக் குறுக்கி நின்றிருந்தவளை பார்த்ததும்...அப்படியே அவளை இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான்...அவனது ஈரம் முழுவதும் இப்போது அவளுடையிலும்.
கோபத்தில் அவனைத் தள்ளிவிட்டவள்...
“கொஞ்சநேரம் என் டாடிக்கூடப் பேசிட்டிருந்திட்டேன், அதுவும் உன்னை மறந்து இருந்தது,என் தப்புத்தான்...அதுக்கு இப்படித்தான் விட்டுட்டு வருவியா...என்கூட வா அப்படினுக்கூடக் கூப்பிடாம வந்திட்ட...இப்படிக் கஷ்டப்படுத்தான் என்னை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா...உனக்கு மட்டுந்தானா கெத்து காண்பிக்கத்தெரியுமா...நானும் கெத்துக் காண்பிக்குறேன் போடா...” என்று அவனிடமிருந்து திமிறிக்கொண்டு வெளியேற, அவ்வளவுதான் அவனது முகம் மாறியது...
கொஞ்சநேரம் அமைதியாக அவளையே பார்த்திருந்தவன்...
“ஒரு மணி நேரம் உங்கப்பாகிட்ட பேசிட்டிருந்ததான...
ஒருநிமிஷம் வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு நொடியாவது என் நியாபகம் வந்து என்னைத்திரும்பி பார்த்திருக்கலாமே...ஏன் பார்க்கலை? அந்தளவுக்குக் காதலனாகவும் உன் மனசுல பதியல, கணவனாகவும் உன்னோட இதயத்துல இடமில்லை அப்படித்தான...ஏதோ காதல் சொன்னான், தேடிவந்து கட்டிக்கிட்டானுதான் என்கூட வாழற இல்லை...”
ஷன்மதிக்குச் சத்தியமாக ஒன்னுமே விளங்கவில்லை...மலங்க மலங்க விழிக்க...
“எல்லாப் பொண்ணுங்களுக்கும்...கல்யாணம் ஆனதும் தாய்வீட்டை பிரிந்துபோறம்னு ஏக்கம் இருக்கும்...இதுல நான் மட்டும் எதுல விதிவிலக்கு.”
" பிறந்ததிலிருந்தே ஒருநாள்கூட அப்பாவை பிரிந்ததேயில்லை தெரியுமா... வெளிநாட்டுப் பயணங்கள் கூட ஒரு கம்பெனியிலிருந்து வேற யாராவது தான் போவாங்க, இல்ல அப்பா குடும்பத்தையும் கூட்டிட்டு போவாங்க, அப்படித்தான் இவ்வளவு நாளும் இருந்திருக்கோம், கல்யாணம் முடிஞ்சு தான் இப்படி அப்பாவை பார்க்கமல் இருந்திருக்கேன், அந்த ஏக்கத்தில் அப்பாகிட்ட பேசிட்டிருந்துட்டேன், அதுக்காக உங்க ஈகோ இவ்வளவு ஹர்ட்டாகுதா"
சட்டென்று தன் கையிலிருந்து தள்ளி விட்டுவிட்டான்...
“நான் ஈகோவுல பேசலைடி...உனக்கு அந்த ஒரு மணி நேரத்துல என் நியாபகம் ஏன் வரவில்லைனுதான் கேள்வி...முடிஞ்சா பதில் சொல்லு, இல்லைனா விடு...”
என்று டைனிங்க் டேபிள் சேரில் அமர்ந்து, வேறு தட்டு எடுத்துப்போட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
“இது என்னடா புதிய சோதனை ...நான் எப்படிச் சக்தியை மறந்தேன்...” நெற்றியில் கைவைத்து அமந்தவளை "உன் ட்ரஸ் ஈரமாயிருக்கு போ, போய் மாற்று" எனச் சக்தி சத்தமிட.
“உங்க ட்ரஸ்ஸும்தான் ஈரமாயிருக்கு வாங்க இரண்டுபேரும் சேர்ந்து மாற்றலாம்” என்றதும்...சக்தி அமைதியாக உண்ண ஆரம்பித்தான். சாப்பிட்டு முடித்தவன் மாடியில் சிறிது நடந்துவிட்டு வந்தவன் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தமானான்.
இருவரும் ஒன்றுமே பேசாமல் அமைதியாகப் படுத்துவிட, பாதித் தூக்கத்தில் மனசே சரியில்லாமல், தூக்கம் வரவில்லை என எழுந்து அப்படியே அமர்ந்த ஷன்மதி, பக்கத்தில் நன்கு தூங்கிக்கொண்டிருந்தவனைப் பார்த்து கொலைவெறியானவள்...
“நான் இங்க தூக்கம்வராமல் முழித்திருக்கேன் தூங்கறதப்பாரு” என்று புலம்பியவள் அப்படியே குனிந்து சக்தியின் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்துவிட்டாள்...
வலியில் அலறி எழுந்தவன், வலிதாளாமல் கன்னத்தைத் தடவிக்கொண்டே
“இரட்சஷி, ட்ராகுலாவாடி நீ இப்படிக் கடிச்சுவைக்குற, இரத்தக்காட்டேறி பாதித் தூக்கத்துல ஏன்டி கடித்து வைத்த...” என வலியில் வாயில் வந்ததைச் சொல்லி திட்டிக்கொண்டிருக்க.
அவனைப் பார்த்துச் சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்க...
கொஞ்சம் நிதானமானவன்.
இப்போது முறைத்துப்பார்த்து "இங்க பக்கத்துல வா" என அழைக்க.
அவன் அழைப்பே சரியில்லை என்றதும் கட்டிலில் இருந்து இறங்கி ஓடப்பார்க்க...அதற்குள் சக்தி இறங்கி அவளை மறித்து நின்றான்.
அவளது கண்களோ “சாரி” என்று கெஞ்ச விடுவானா அவன்...அப்படியே டெடி பியரை தூக்குவதுபோலத் தோளில் தூக்கியவன்...கட்டிலில் தூக்கிபோட்டுவிட்டான்...
அவனுக்குத் தெரிந்த வழியில் அவளது சதைமிக்கப் பகுதியைத் பற்களால் கடித்தே இம்சை செய்துவிட்டு,
“கொழுப்புக்கூடிப்போச்சுதுடி உனக்கு” என்றவன்...
ஷன்மதியின் உடலில் கொழுப்புமிக்கப் பகுதியை தேடி பிடித்துக் கடித்துச் சுவைத்தவன்...அவளை அடக்க, அவளோ திமிறி "டேய் நீ போலிஸ்காரன்டா, வில்லன் மாதிறி ரேப் பண்ற” என்று அவளது மேலேறி இயங்கிக் கொண்டிருந்தவனின் கையிலடிக்க
"பேசியே கொல்லாதடி வக்கீலு, ரொமாண்டிக் மூடுக்கெடுதுடி" என மூச்சிவாங்கிக்கொண்டே பேச...
ஷன்மதியோ அவனது இதழ்களை , வலிக்க இழுத்துக் கடித்துத் தனக்கு உணவாக மாற்ற முயற்சிக்க
அடிதடியுடன் ஒரு கூடலில் இறங்கி வக்கீலும் போலிஸூம் தங்களது விவகாரத்தை உடலினால் பேசி முடிவுக்குக் கொண்டுவந்தனர்...
அடுத்த நாள் முதல் சக்தி வேலைக்குச் செல்ல...தனிமையில் இருப்பவளுக்குத் துணையாகப் படிப்பிருக்க...
இரவு வேளைகளில் ஷன்மதிக்கு ஆடையாக சக்தி மாறிக்கொண்டிருந்தான்.
இரண்டு மாதங்கள் எப்படி கடந்தது என்றுக்கேட்டால் தெரியாது.
கணவனின் குணநலன்கள் மனைவிக்கும், மனைவியின் செயல்பாடுகள் கணவனுக்கும் ஓரளவு புரிந்துக்கொண்டிருந்தது இப்போது.
அவளது பரீட்சைக்கான அட்டவணைகள் வந்துவிட...அடுத்தநாள் அவள் சென்னை செல்லவேண்டியதிருந்தது, சக்திக்கு துறைசார்ந்த வேலைகள் இருக்க அவனால் போகமுடியாத நிலையில்...
விஷ்ணுவை அழைத்திருந்தாள் “இங்க வந்து என்னைக் கூட்டிட்டுப் போ” என்று.
காலையில் வேலைக்குச் சென்றவன் மாலையில் சிறிது நேரமாகவே வீட்டிற்கு வர , வீடு இருட்டாக இருக்கவும்...மதி அவளை அழைத்துக்கொண்டே வந்தவன்...கிட்சனில் ஏதோ சமையல் செய்கின்றேன் என்ற பேரில் என்னவோ செய்துக்கொண்டிருந்தாள்...சக்தி வந்ததைக்கூடக் கவனிக்கவில்லை.
" என்னடி செய்ற" என்ற அவன் சத்தம் கேட்டதும், பயந்து பதறியவளின் மேல் அவள் கையில் வைத்திருந்த சாக்கலேட்ஸ் சிரப் அவளது முகத்திலும் கழுத்திலும் பட்டு நெஞ்சினூடே வடிந்துக்கொண்டிருந்தது...
“என்ன சக்தி இது இப்படியா பேய் மாதிரி பயமுறுத்துவீங்க?” என்று கத்திக்கொண்டிருக்க...சக்தியின் பார்வையோ அவளின் மேனியில் சிந்திய சிரப்பின் மீதே கண்கள் போகவும்...
“ஆபிசர் போய் ட்ரஸ் மாத்துங்க, நான் துடைச்சிட்டு வர்றேன்” என்று நகர்ந்தவளை...
“அது ஏன் சாப்பாடு பொருளை வேஸ்ட் பண்ற...எங்கப்பா சாப்பாடு பொருளை வேஸ்ட் பண்ணக்கூடாதுனு சொல்லிருக்காங்க” என்க...
ஷன்மதியோ “என்ன உளறுரான்?” என்று உதட்டை துருத்திக் காண்பிக்க...
சட்டென்று இழுத்து அவளின் கன்னத்தில் ஒட்டியிருந்த துளியை நுனி நாக்கினால் தொட்டுத் தடவி உண்க, கிறக்கத்தில் மதியோ கிட்சன் மேடையில் சாய்ந்து நின்றவள், தனது கை விரலில் இருந்ததை உதட்டில் தடவியிருந்தாள் இப்போது, கள்ளசிரிப்புடன் தனது உதடுக்கொண்டு அதையும் சுவைத்தவன், கழுத்திலிறங்கி அப்படியே இரு மேடுகளுக்கிடையில் பயணித்து நாக்கினால் தொட்டு தொட்டு சுவைக்க, சுவைக்க அவனின் சட்டைப் பட்டன்களை மதி கழட்டிறிருந்தாள்...அந்த அந்தரக்கோலமாகக் கிடந்த கிட்சன் மேடையே அவர்களது பள்ளியறையாகியது.
சிந்திய சாக்லேட்ஸ் சிரப்பின் மீதே இருவரும் உரண்டு பிரண்டு அதைத் துடைக்கின்றேன் என்றபேரில் ஆடைகளைந்து இருமேனியும் உறவாட ஏதுவாகக் கைக்கொண்டும், நாக்கு கொண்டும் துடைத்து சுவைத்து.
காமத்துபாலையும் சுவைக்க ஆரம்பித்தனர்..எந்த சுவை அதிகமென்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு.
துடைத்து முடித்தவன் மனையாளின் மேனியில் வேறு சுவை வேண்டும் என்று.
அவளது மேனியில் ஊர்வலம் வந்தவன், எத்தனை மேடு பள்ளங்கள் என்று அளந்து முடித்தவன்...இணையின் உயிருக்குள் தன் உயிரை இறக்கி இயங்கராம்பித்தான்...
அவனின் இயக்கத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் ஷன்மதியோ அந்த வெற்றுத்தரையில் வலுக்கி விலகிக்கொண்டுப்போக...தனது இயக்கம் தடைப்பட எரிச்சலடைந்தவன்,சட்டென்று தனது இரு கைகளிலும் பூச்செண்டாகத் தூக்கிக்கொண்டான்.. தனது இயக்கத்திற்கு வாகாகக் கைகளை அவளது இடுப்பில் அணைத்துப்பிடித்துத் தன்னுயிரின் இயக்கத்தைத் தொடர்ந்தான், இருவரும் உயிரின் உச்சம் தொட்டு மீண்டனர்...
இரவு பன்னிரெண்டு மணி சரியாக அடிக்கவும்...கணவனின் காதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவும்...திகைத்து விழித்தவனைத் தனது கைகளால் சக்தியின் கண்களை மூடி அழைத்துச் சென்று கண்களைத்திறக்க...வீட்டின் முன்னறையில் டேபிள் போட்டு சாக்கோ லாவா கேக் வைத்து, மெழுகுவர்த்தியும் ஏற்றிவைத்திருந்தாள்.
சக்தி இதை எதிர்ப்பார்க்கவில்லை...ஆனந்த அதிர்ச்சி.
அவனுக்குக் கிப்ட்ஸூம் வாங்கி வைத்திருந்தாள்...ட்ரஸ், மற்றும் மோதிரம் இருவருக்கும் ஒன்றுபோல என அசத்தியிருந்தாள்...
அவனது பிறந்தநாள் கேக் செய்து முடித்துப் பிரிட்ஜில் வைத்துவிட்டு எல்லாம் ஒதுக்கியவளைத்தான் பயமுறுத்தி சாக்கலேட்ஸ் சிரப்பை சிந்தவைத்திருந்தான்...சக்திக்காகத் தானே எல்லாம் செய்திருந்தாள்.
சக்திக்கு ரொம்பச் சந்தோஷம், அது அவனது முகத்திலயே தெரிந்தது. அன்றைய தினம் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்...வீட்டிலிருந்து அழைத்து வாழ்த்துக்கள் சொல்வர் அவ்வளவுதான்...நிறைய வருடங்கள் கழித்து நிறைவானதொரு பிறந்தநாள் அவனுக்கு...
அடுத்தநாள் விஷ்ணுவரவும் "வாங்க மச்சான்” என மகிழ்வுடன் வரவேற்ற சக்தியைப் பார்த்து விஷ்ணு திகைத்து நிற்க...
“அவனைப் பயமுறுத்தாதிங்க” என்று கணவனின் தோளை தட்டியவள்...விஷ்ணுவை உள்ளே அழைத்துச் சென்றாள்...சக்தி இப்போது கொஞ்சம் சகஜமாக விஷ்ணுவிடம் பேசினான்.
இருவரும் கிளம்பும் வேளையில் ஆயிரத்தெட்டு அறிவுரைகள் வழங்கி, முத்தமிட்டுப் பிரியமனமில்லாமல்... “சீக்கிரம் வந்திடுடி...மிஸ் யூ” என்று முதல் முறையாக அவளிடம் இந்த வார்த்தையைக் கூறி வழியனுப்பினான்.
அவள் சென்னைக்குச் சென்ற பத்துநாட்களில் சக்திக்கு விஷ்ணு அழைத்து “ஷன்மதியை கடத்தி சென்றுவிட்டனர் போலிஸ்ல கம்ப்ளையிண்ட் கொடுத்திருக்கு" என்ற தகவலை சொல்லியவன்...
“நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்கத்தான்” என்றிருந்தான்.
அத்தியாயம்-12
ஷன்மதியும் விஷ்ணுவும் பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் எல்லா நண்பர்களுடனும் விடைபெற்றுக் கொண்டு, வெளியே வந்ததும்.
“நான் வண்டி ஓட்டுகிறேன்” என்று வண்டி எடுக்கப் போனவளைத் தடுத்து விஷ்ணு ஓட்டிக்கொண்டு வந்தான்... கல்லூரியின் வாயிலைக் கடந்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை...பின்னாடி வந்த ஒரு வண்டி இடிக்கின்ற மாதிரி வர....முன் பக்கமாகயிருந்து ஒரு வண்டி அவர்கள் வண்டியை மறித்துக்கொண்டு நின்றது...
விஷ்ணு சுதாரித்து இறங்கி ஷன்மதியின் கையைப் பிடித்து ஓட ஆரம்பிக்கவும், விஷ்ணுவை ஒருத்தன் காலில் தாக்க கவிழ்ந்து விழுந்தவனுக்கு நெற்றியில் பயங்கர அடி...எழுந்து பார்க்கும்போது...ஷன்மதியும் அங்கில்லை, அந்த வண்டிகளும் அங்கில்லை.
விஷ்ணுவிற்கோ ஒரு நிமிடத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத் திருதிருவென முழித்துக் கொண்டு நின்றிருந்தான். அவனது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
எந்தப் பக்கம் சென்று இருப்பார்கள் என்றுகூடத் தெரியவில்லை... தனது பாக்கெட்டில் வைத்திருந்த போனைத் தேடி எடுத்தவன் ஷ்ரவனுக்கு அழைத்துச் சொல்லிய வேகத்தில், சக்திக்கும் அழைத்து விபரம் சொன்னான்...
அங்குச் சக்தியோ “இங்க ஹைதரபாத்தலனாக்கூடப் பரவாயில்லை என்னோட எதிரியா இருக்கலாம்...சென்னையிலனா எப்படி? யாராக இருக்கும்? பணம் மட்டும் நோக்கமாகயிருந்தா ஆபத்து குறைவுதான்...பழிவாங்கணும்னு கடத்தியிருந்தால்” எனத் தோன்றியதும், தலையை உலுக்கி எதுவும் ஆகக்கூடாது என்று தன்னைத்தானே சமன்படுத்திக்கொண்டு சென்னைக்குக் கிளம்பியவன்...முதன்முறையா மனதினில் அழுத்தத்தை உணர்ந்தான்...பிளைட்டில் தலைசாய்த்து இருந்தவன்...உள்ளத்தில் முழுவதும் அவனது மதியின் சிந்தனை.
சென்னையில் இறங்கி அங்குள்ள கமிஷனருக்கு அழைத்துப் பேச...டிபாரட்மெண்ட வண்டி வந்தது, நேராகச் சென்றது கமிஷனர் ஆபிஸிற்குத்தான்.
விஷ்ணுவை அழைத்தான், அவனோ மருத்துவமனையில்...கண்டிப்பாக அவனை விசாரித்தால் மட்டுமே முழுமையான தகவல் கிடைக்கும் என்பதால், அவன் இருந்த மருத்துவமனைக்கே சென்றான்...
கடத்தி இருந்தவர்கள் விஷ்ணுவை காலில் அடித்ததால் கால் நன்றாக வீங்கி நடக்க முடியாமலும் ,கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் தையல் போட்டு கட்டுப் போட்டிருந்தது...எழும்ப முடியாமல் கட்டிலில் படுத்திருந்தான்.
சக்தியைக் கண்டதும் “சக்தி அத்தான்” என அவனது கையைப்பிடித்து
“நான் திரும்பறதுக்குள்ள ஷானுவைக் காணோம் அத்தான்...” கண்களில் கண்ணீர் வர. நடந்ததை மறுபடியும் ஒன்றுவிடாமல் கூறியிருந்தான் ...
கடத்திய இடத்தின் அருகேயிருந்த கேமாரக்கள்...விஷ்ணு சொன்ன வண்டியின் அடையாளங்களில் உள்ள வண்டிகளைத் தேடுமாறும் சிட்டி முழுவதும் அலர்ட் செய்யப்பட்டிருந்தது.
எல்லாப் போலீஸ் ஸ்டேஷன்லயும் ஷன்மதி போட்டோவோடு தகவல் பறந்தது.
எல்லாரிடமும் தகவல் பறந்தது தேடிப்பார்த்து, இரவு ஆகியும் ஷன்மதியை கண்டுபிடிக்க முடியவில்லை, வழியறியாது தவித்துக் கொண்டு இருந்தவனை, மேலும் வலிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஷ்ரவன் பேசினான்...
சக்தியின் பெற்றோரும் வந்திருந்தனர், ஹரிதா தன் மகளைக் காணவில்லை என்றதும் அழுது அழுது துவண்டு படுத்திருந்தாள் ஷ்ரவனுக்கோ பித்தின் நிலை...
அந்தக் குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு, செல்லபெண் ஷன்மதியை காணவில்லை என்றதும், ஒட்டுமொத்தக்குடும்பமும் ஷ்ரவனின் வீட்டில்தான் இருந்தனர்.
வேறு ஏதும் தகவல் கிடைக்குமா என மாமனாரையும் விசாரிக்க வந்தான், தொழில் சம்பந்தமாக யாராவது ஷன்மதியை கடத்தி இருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டி இருந்ததால் சக்தி வரவும்...
கோபத்தில் அவனது சட்டையைப் பிடித்து “என் பொண்ணு என்னைக்கு உன்னைப் பார்த்தாளோ அன்றையிலிருந்து தான் அவளுக்குப் பிரச்சனை, முதல்நாளே பேப்பர்ல உங்க ரெண்டு பேர் போட்டோ போட்டு கேவலப்படுத்தினாங்க, அதுவும் உன்னால தான் நீ சம்பந்தப்பட்டதுதான்...
இதுக்குத் தான் நான் என் பொண்ணை உனக்குக் கட்டி தர மாட்டேன்னு சொன்னேன் கேட்டியா கேட்டியா” என... அவனது சட்டையைப் பிடித்து இழுக்கவும் கதிர் தான் ஓடி வந்து இருவரையும் பிடித்து விலக்கிவிட்டான்...
ஷ்ரவன் பேசியதுதான் சக்திக்கு மூளையில் மின்னலடித்தது... ஆம் அந்தப் போட்டோகிரபரின் நியாபகம் வந்ததும்தான்... யாரிடமும் எதுவும் சொல்லாமல் மறுபடியும் கமிஷனர் ஆபிஸ் விரைந்தான், அந்தப் போட்டோகிராபரும், அவனுடம் சம்பந்தப்பட்ட அந்த அரசியல்வாதியின் இப்போதைய அட்ரஸ் மட்டும் தகவல்களைத் திரட்டினான்...
உடனே அவனைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க, அவன் திமிறாகவே சொன்னான்...
“அந்த நாளிதழில் என்னை வேலைவிட்டெடுத்துவிட்டனர்...அதனால எனக்கு இப்போ எங்கயும் வேலைக் கிடைக்கவில்லை..நான் சும்மாதான் இருக்கேன் எனக்கு எதுவும் தெரியாது” என்று சாதித்துவிட்டான்.
அவனால் பாதிக்கப்பட்ட அந்த அரசியல்வாதி பெருமாள்...அவரது வீட்டிற்குச் சென்று விசாரிக்க "என்ன தம்பி விளையாடுறீங்களா...இப்போதான் நான் என் கட்சியில் கொஞ்சம் பணங்கொடுத்து மறுபடியும் சேர்ந்திருக்கேன்...நானா எந்தத் தப்புதண்டாவுக்கும் போகறதில்லை” என்று சொல்லிவிட்டான்...
அங்கயே வீட்டு வாசலிலயே ஷன்மதி இன்னும் கிடைக்கவில்லையே என்று உள்ளம், பதற காரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தவனின் கண்ணில் பட்ட காட்சியைக் கண்டதும் ஷன்மதி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கைப் பிறந்தது...
காலேஜில் நடந்த கலவரத்தில் ஷன்மதியிடம் தப்பாக நடக்க முயன்று, அவளிடம் அடிவாங்கிய பையன், அரசியல்வாதி பெருமாள் வீட்டிற்குள் நுழைவதைக்கண்டான்...அவனுக்கு விசயம் பிடிபட்டது இப்போது தைரியமாகவே உள்ளே சென்று அவனது கழுத்தைப் பிடித்துத் தூக்கியவன் சுவற்றோடு வைத்து நெறிக்கவும், செத்துவிடுவான் என்ற நிலையில்தான் பெருமாள் ஓடிவந்து " தம்பி தம்பி விட்ருங்க...என் பையன் அவன்...அவனுக்கும் என் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சக்தியின் கையைப்பிடித்திழுக்க முடியவில்லை
சக்தி"உன் பையனை ஷன்மதி எங்கயிருக்கா...என்னனு சொல்லச்சொல்லு இல்லைனா கொன்னுபோட்ருவேன்"என்க
“அவனுக்கு என்ன தம்பித் தெரியும் அவன் படிக்குறப் பையன்” என்றான்...
“படிக்குற பிள்ளையா அவன், உன் புத்திதான் உன் பிள்ளைக்கும் இருக்கும்” என்றவன். இன்னும் அழுத்தமாகக் கழுத்தை நெறிக்கக் கண்கள் பிதுங்கி “சொல்றேன் சொல்றேன்” என்று அலறினான்...
"அந்தப் போட்டோகிராபரும் நானும்தான் பிளான் போட்டோம்" என்க அவனைக் கீழே இறக்கியவன்...சட்டென்று அவனது வலது கையைத் திருகி பின்பக்கமாக வைத்து அழுத்த...வலியில் கத்தியவன்..
“அன்னைக்கு ஷன்மதி மிதிச்சது எனக்கு ஆண்மையில பிரச்சனையாகிட்டு, இனி எதுக்கும் லாயக்கில்லாதவனாகிட்டேன். நான் என்ன செஞ்சேன் பிடிக்கலைனா தப்பிப் போக வேண்டியது தான...எதுக்கு என்னைய அடித்தா...அதுவும் மெயின்லயே எவ்வளவு மிதிச்சா...வலி வேறு...அதான் அப்பவே அவளை எதாவது செய்யணும்னு, எல்லாத் திட்டமும் போட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க குறுக்கப் புகுந்து, அவளைக் கல்யாணம் பண்ணி ஹைதராபாத்துக்கே கூட்டிட்டு போயிட்டாங்க எனக்கு யாரையும் தெரியாது, அதான் இத்தனை நாளாகக் காத்திருந்தோம், அவ வர்ற வரைக்கும்,
அந்தப் போட்டோகிராபரும் ஷன்மதியை தூக்குவதற்காகக் காத்திருந்தான்....
ஷன்மதியின் அப்பா ஷ்ரவன் அந்தப் போட்டோகிராபரின், வேலை போவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார் அதனால் அவளை ஏதாவது செய்தால் உங்களுக்கும் அவளோட அப்பாவுக்கும் ஒரே நேரத்துல பிரச்சினை வரும்னு சொன்னான் அதனாலதான் கடத்தினோம்...”
“ஷன்மதி எங்கடா? முதல்ல அதைச் சொல்லு மீதிகதைய உன்னை அப்புறம் விசாரிக்கும்போது வந்து தெரிஞ்சுக்கிறேன்” என்று சக்தி கர்ஜிக்க...
“அது தெரியாது அவளை வைத்திருந்த வண்டி இப்பொழுது சிட்டிக்குள்ள எங்காவது சுத்திட்டிருக்கும்...” என்று அசால்டாகச் சொன்னான்.
“என்ன வண்டிடா?” என்று கேட்கவும்...
அவன் சொன்ன வண்டியைக் கேட்டதும் சக்தியோ ஒரு நிமிடத்தில் ஆடிப்போய்விட்டான்...
நிமிடத்தில் டிபார்ட்மென்ட்டிற்குத் தகவல் சொல்லி உதவிக்கேட்டவன்...தனது மாமானாரின் அக்கா அக்ஷராவின் பையனுக்கு அழைத்துச் சில ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னான்...
சிட்டியில் உள்ள எல்லாக் கண்காணிப்பு கேமாராக்களையும் கவனித்துச் சொல்ல சொன்னான்...
மயக்கத்திலிருந்த ஷன்மதியோ விழிப்பு வந்து கண்ணைத் திறக்க முயற்சிக்க முடியவில்லை, அரை மயக்கத்தில் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க என்ன சத்தம் என்று கவனிக்க அது நாய்களின் சத்தம்....
பயந்து கால் கைகளைக் குறுக்கிக்கொண்டு அப்படியே அசையாமல் படுத்துக்கிடந்தாள்... பயத்தில் கண்ணீர் முட்டிக்கொண்டு மூச்சு முட்டுவது போல் தோன்ற, ஏதோ சிறு வெளிச்சம் தெரியவும் கண்களைத் திறந்து பார்க்க சுற்றிலும் நாய்கள் படுத்துக் கிடந்தது நாய்கள் பாதி மயக்கத்திலும் சில நாய்கள் விழித்தும் கிடந்தது...ஆம் அவளைக் கடத்தி அந்தத் தெரு நாய்களைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் வண்டிக்குள் போட்டிருந்தனர்...
ஏற்கனவே அந்த நாய்கள் மனுஷர்கள் நடமாட்டத்திற்குப் பழகிய தெரு நாய்கள், ஷன்மதியை ஒன்றும் செய்யவில்லை, அவளுமே மயக்கத்தில் அசையாமல் இருந்ததால் ஒன்றும் பிரச்சினை இல்லை...
இப்பொழுது அவள் முழித்து அசையவும் சில வெறிநாய்கள், அவளைப் பார்த்துக் கொண்டுதான் நின்றிருந்தது...
போலீஸ் ஒரு பக்கம் என்றும் ஷ்ரவனின் குடும்பத்திலிருந்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் இருசக்கர வாகனம் கார் என்று எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பக்கம் அந்த வண்டி எங்கே நிற்கிறது என்று தேடி கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் சக்தி கண்டுபிடித்து அங்குச் சென்றான்...
அந்த வண்டியின் ட்ரைவர்.முழு போதையில், வண்டியின் பின் பக்கம் என்ன இருக்கிறது, நாய்கள் மட்டுமே என்று நினைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தான்... அதற்காகவே அவனுக்குத் தனியாக அழைத்துப் பணம் கொடுத்து நிறையக் குடிப்பதற்கும் வாங்கிக் கொடுத்து இருந்தனர்...
போலீஸ் சுற்றி வளைத்தும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் படுத்திருந்தான்... படபடவென்று பின் பின்பக்க கதவை உடைத்து சக்தி திறந்து விடவும், நாய்கள் எல்லாம் திசைக்கு ஒன்றாக ஓடியதும் எழும்ப முடியாமல் அரை மயக்கத்தில் ஷன்மதி படுத்திருந்தாள்...
அந்தக் கோலத்தில் அவளைக் கண்டதும், சக்தி உயிர் வலியை உணர்ந்தான். ஓடி சென்று அவளைத் தனது கைகளில் தூக்கியவனை அரை மயக்கத்திலயே உணர்ந்தவள், அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றியிருந்தாள்...சக்தி வந்தது கனவு என்றாகிவிடுமோ என்று...அவளது கணவன் அவளைக் காப்பாற்றிவிட்டான் என்றாலும் நடந்த நிகழ்வு, அவளின் மூளையை நம்பவிடவில்லை...
மருத்துவமனையில் அவளைச் சேர்த்துவிட்டுக் காத்திருக்க, மகளினைத் தேடி ஓடிவந்த ஷ்ரவனைக் கண்டதும் சக்திக்கே பாவமாக இருந்தது...
அமைதியாக வராண்டாவில் நிற்க, கட்டிலில் படுத்திருந்த ஷன்மதியின் நிலையப் பார்த்து அழுதவன், அவளது கைகால்களைத் தடவி, “உனக்கு ஒன்னுமில்லைலடா?” என எத்தனைமுறை கேட்டான் என்று தெரியாது,
அவளருகிலயே அமர்ந்துக்கொண்டான்...
ஷன்மதி இப்போது சிறிது தெளிந்திருந்தாள், ஷ்ரவனுக்கு ஆறுதல் சொன்னாள்...
“ஒன்னுமில்ல டாடி நான் நல்லாயிருக்கேன்...நீங்க வருத்தப்படாதிங்க” என்று...அவள் பயந்து நடுங்கியதை சொன்னாள் அவ்வளவுதான் தாங்கிக்கமாட்டார் என்று மறைத்தாள்... விஷ்ணுவும் மெதுவாக நடந்து ஷன்மதியைப் பார்க்க வந்திருந்தான்.
வெளியே சக்தியோடு நின்றிருந்தான், மகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ஷ்ரவன் ஆங்காரத்துடன் வந்து சக்தியின் சட்டையைப் பிடித்து இழுத்தவன் “உன்னால தான்டா என் பிள்ளைக்கு இவ்வளவு கஷ்டம்” என்று அவனது கன்னத்தில் மாறி மாறி அறைந்துவிட்டான்...இதை எதிர்பார்க்காத சக்தி ஷ்ரவனைக் கையைப்பிடித்து விடுவிக்க முயல, விடுவிக்க முடியாமல் போக, வலிந்து விடுவிக்க முயலவும் ஷ்ரவன் வராண்டாவிலயே தடாலென்று விழுந்துவிட்டான்...
வெளியே சத்தம் கேட்டதும் கட்டிலிருந்து இறங்கி வெளியே வந்த ஷன்மதி பார்த்தது, சக்தி தனது தகப்பனை கீழே தள்ளிவிட்டு இருந்ததைத்தான்.
தன் தந்தையைத் தள்ளிவிட்டுவிட்டான் என்றதும் எங்கியிருந்து அவ்வளவு பலமும் கோபமும் வந்ததோ ஷன்மதிக்கு...ஓடி வந்து சக்தியை அறையப்போக , சக்தி அவளது கையைப்பிடித்துவிட்டான் , அவனது சட்டையைப் பிடித்து “உங்களுக்கு எவ்வளவு தைரியம் எங்கப்பாவை அடித்துத் தள்ளிவிட?”
என்று கோபத்தில் நிற்க.
“உங்களாலதான் எனக்கு இவ்வளவு பிரச்சனையும் அப்போ அவங்க கோபப்படத்தான் செய்வாங்க” என்று எகிறியவளைப் பிடித்து நிறுத்தியவன் சுற்றிலும் பார்க்க...
அங்குச் சுற்றி அத்தனைபேரும் இவர்களைப் பார்த்திருக்க, சக்தியின் டிபார்ட்மெண்ட் ஆட்களும் இன்ஸ்பெக்டர்ஸ், காண்ஸ்டபிள்ஸ் என்று நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்...
ஒரு நிமிடம் நின்று தன் மூச்சை இழுத்துவிட்டவன்...அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
கதிர் ஷ்ரவனின் அருகில் வந்தவன் " எந்தத் தைரியத்தில் என் பையனக் கைநீட்டி அடிச்சீங்க, அவன் நினைத்திருந்தா உங்க வயசையும் மரியாதையையும் நினைக்காமால், திருப்பி அடிக்க முடியாதா அவனுக்கு, அதைச் செய்யாமல் உங்களுக்கு மரியாதைக்கொடுத்து விலக்கித்தான விட்டான்...நீங்க விழுந்துட்டீங்க....ஒரு பொதுயிடத்துல எப்படி நடந்துக்கணும்னு அடிப்படை அறிவுக்கூடயில்லாம நீங்க தான், நடந்துக்கிட்டீங்க...அப்படியும் என் பையன் அநாகரிகமா நடக்கலை...சுத்திப்பாருங்க புரியும்”
ஒரு நிமிடம் ஷன்மதியை பார்த்தவன் “உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்ப்பர்க்கலைம்மா...அவனோட பொசிஷனுக்குத்தான் மரியாதைக்குடுக்கலை...உன்னோட கணவன்” என்கிற மரியாதையாவது கொடுத்திருக்கலாம்...
“என் பையன் எந்தயிடத்துலயும் நிதானமும் தவறலை, மரியாதைக்கேடாகவும் நடக்கலை...இனி அவன் எடுக்கற முடிவுல நாங்க தலையிட மாட்டோம்...அது என்னவாகயிருந்தாலும்” என்றவன்...”நிலா வா கிளம்பு உன் பையன், அவங்க வீட்டுக்கு வந்த மருமகனுக்கே இவங்களால சரியான மரியாதைக் குடுக்கத்தெரியலை...நமக்கு எங்கத் தருவாங்க?” எனப் பேசிக்கொண்டே சென்றுவிட்டான்...
ஷன்மதிக்கோ அதிர்ச்சி "நீங்க ஏன்பா அவரை அடிச்சீங்க?” எனக் கேட்டுக்கொண்டிருந்தவள் மயங்கிவிழ, அவ்வளவுதான், விஷ்ணு ஓடிப்போய் அவளைத் தாங்கியவன் அறைக்குள் கொண்டு படுக்கவைத்தான்.
ஹரிதா மகளின் அருகில் ஓட...ஷ்ரவனுக்குமே இப்போது கதிர் பேசியதும் தான் சுற்றிப்பார்த்தான்...
அதிக அன்பும் சில பைத்தியக்காரத்தனத்தைச் செய்யும்...அதற்கு ஷ்ரவனும் விதிவிலக்கல்ல.
ஒரு வாரம் சென்றிருக்கும்...
ஷன்மதியோ சக்திக்குப் போனில் அழைக்க எடுக்கப்படவில்லை... “அப்பாதான் எதோ தப்பு செய்தாங்கனா...எனக்கு எங்கப்போச்சுது அறிவு?” என்று தலையிலடித்துக்கொண்டாள்...
ஷ்ரவன் அந்த நேரத்தில் வந்து சில பேப்பர்களில் கையெழுத்துக்கேட்க போட்டுக்கொடுத்தாள்...எப்போதும் கம்பனி ஷேர் விசயமாகக் கையெழுத்து வாங்குவான் அதுபோல என்று நினைத்து போட்டுக்கொடுத்தாள்...
அத்தியாயம்-13
ஷன்மதியோ தனது அறையின் ஜன்னல் வழியாக வெளியே இலக்கின்றி வெறித்து இருந்தாள் அவளது அருகில் கொஞ்சம் காகிதங்கள் பறந்து கொண்டிருந்தன...
ஜன்னலில் இருந்து வந்த காற்றுக்கு ஈடாக அந்தக் காகிதங்கள் படபடவென்று ஏதோ பேசிக் கொள்வது போலத் தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.
ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில் அன்று காலையில் ஷன்மதி பேருக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்திருந்தது அதைக் கையெழுத்து போட்டு வாங்கியவள் பிரித்துப் படிக்கவும்...
அவளது இதயமே ஒரு நிமிடம் நின்று துடிப்பது போல உணரவும், இதயத்தின் வலியை கண்கள் உணர்ந்ததோ என்னவோ கண்ணீர் தானாகக் கன்னங்களில் உருண்டு ஓடியது...
ஷன்மதி கையெழுத்து அதிலிருந்தது...அதனருகில் சக்தியின் கையெழுத்து அதிலிருந்தது...கோர்ட்டிலிருந்து இரண்டாம் கட்ட பெட்டிசன் ஃபைல் பண்ணியிருந்ததும் இரண்டுபேரும் இப்போது மூன்றாம் கட்டமாகக் கவுன்சிலிங்க் வருமாறு அழைத்திருந்தனர்..
ஷன்மதி இருந்த இடத்தில் காலையிலிருந்து இரவு வரை அப்படியே அமர்ந்திருந்தாள் ஹரிதா வந்து அழைத்தும் நகரவே இல்லை...
இரவு ஷ்ரவன் வர்ற வரைக்கும் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்...யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
இரவு ஷ்ரவன் வந்ததும் ஹரிதா விஷயத்தைச் சொல்லவும் அவசரமாக ஓடி வந்தவன் மகள் இருந்ததைக் கண்டு அருகில் செல்ல...அவளோ தந்தையைக் கண்டுக்கொள்ளாது அந்தக் காகிதங்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு அவனைக் கடந்து கீழே சென்றாள்...
"பாட்டி பாட்டி" என நிருபமாவை சத்தமாக அழைக்க...ஏற்கனவே மகன் செய்த செயலினால் பேத்தியின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்கிறதேயென்று வேதனையில் இருந்தவர்...பேத்தி அழைத்ததும் வெளியே வந்து "என்னம்மா இப்படிச் சத்தமா கூப்பிடுற" என்று பதறி அவளருகில் வந்தவரிடம் தனது கையிலிருந்ததை அவரிடம் கொடுத்து,
“இதுல எப்போ என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்கனு உங்க பிள்ளைக்கிட்ட கேட்டு சொல்லுங்க...என் வாழ்க்கையை எனக்குத் தெரியாமலேயே தீர்மானிக்கிறார்...”
அவருக்கும் இது அதிர்ச்சிதான் அதற்குள்ளாகக் கீழே இறங்கி வந்த ஷ்ரவனை அவனை எரித்துவிடுவது போலப் பாட்டியும் பேத்தியும் பார்த்துக் கொண்டிருக்க, ஹரிதா என்னவென்று புரியாமல் மாமியாரின் அருகில் வந்து நின்றாள்...
நிருபமா அந்தக் காகிதங்களை இப்பொழுது ஹரிதாவின் கையில் கொடுத்து விட்டு “பாரு என்ன எழுதியிருக்குனு படிச்சுப்பாரு” என்று நிருபமா கூறவும், ஹரிதாவும் அதை வாசித்துப் பார்த்து விட்டு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பி நின்றாள்.
நிருபமா இப்பொழுது ஷ்ரவனிடம் கேட்டார் " எதுக்கு இப்படிப் பண்ணின. அவளுக்குத் தெரியாமலேயே கையெழுத்து வாங்கி இருக்க அதையும் மருமகனுக்கு அனுப்பி வச்சி அவரும் கையெழுத்து போட்டுவிட்டு அனுப்பி இருக்காரு, கோர்ட்டுக்கு வரச்சொல்லியிருக்காங்க, உன் பிள்ளை வாழ்க்கையை நீயே கெடுக்கிறியா"
ஷ்ரவன் "அவன் வேண்டாம், அவன்கூட வாழ்ந்தால் என் மகளுக்குப் பாதுகாப்பு கிடைக்காது, என் பொண்ணு பயந்து பயந்து வாழணும்...ஊர் ஊரா சுத்தனும்...நிலையில்லாதவன். அவன்கூட வாழ்ந்தா என் பொண்ணு சந்தோஷமாகவே இருக்கமாட்டா, இதுதான் அவளுக்கு நல்லது"
“எது டாடி எனக்கு நல்லதுனு நினைக்கிறீங்க, சக்திய விட்டுப் பிரிந்து வர்றதுதான் எனக்கு நல்லதுனு உங்களுக்குச் சொன்னது யாரு, அவரு என் புருஷன், அவர்தான் என்னோட வாழ்க்கை அது வேணுமா வேண்டாமா என்று முடிவு பண்ணவேண்டியது நான்...நீங்க எப்படி முடிவெடுத்தீங்க”
"ஷானு பாப்பா...நான் உன்னோட அப்பா அதை நியாபகத்துல வச்சு பேசு, என் பொண்ணோட வாழ்க்கையை நான், நான் தீர்மானிக்கக் கூடாதா?"
“அது கல்யாணத்துக்கு முன்னாடி என்னோட முடிவு எடுக்கிற உரிமை உங்களுக்கு இருக்கு. இப்போ எனக்கும் என் புருஷனுக்கு இடையில் நீங்க எப்படி வரமுடியும்... யார் உரிமை கொடுத்தது உங்களுக்கு...” எனக் கோபமாகப்பேசியவளுக்கு அழுகையும் வந்தது...
“நீங்க எங்கப்போனாலும் என்குடும்பம் என்கூட இருக்கணும்னு அழைச்சிட்டுப் போனீங்கதான, நீங்க உங்க பொண்டாட்டி பிள்ளைங்ககூடச் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குற மாதிரிதான என் சக்தியும் நினைச்சிருப்பாங்க...
நீங்க குடும்பமா இருக்கணும்...ஆனா நானும் சக்தியும் குடும்பமா அந்நியோன்யமா இருந்தா உங்களுக்குப் பிடிக்கலை அப்படித்தான...ஏன் டாடி இப்படிச் செய்தீங்க.
பாவம் சக்தி நான் கையெழுத்துப் போட்டிருப்பேனுதான நினைச்சிருப்பாங்க...எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்க...” என நிருபமாவின் தோளில் சாய்ந்து அழுதவள்.
“உங்க ஈகோ மூலமா சக்திய பிரிக்கணும்னு நினைத்து, என் மனசையும் உணர்வுகளையும் கொன்னுட்டீங்கப்பா” என்றவள்...
ஷ்ரவன் அவளிடம் பேச வரவும் கைகாட்டி நிறுத்தி "ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசாதீங்க. உங்ககூடப் பேசுறதுக்கு எனக்கு விருப்பமில்லை, இதுவரைக்கும் நீங்க செய்த எல்லாவற்றிற்கும் நன்றி” எனக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
தனதறைக்குச் சென்று ஒரு சிறிய பேக் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தவள், வெளியே செல்ல நிருபமா அவளது கையைப்பிடித்து “ஷானு என்ன பழக்கம் இது வீட்டைவிட்டு வெளியப் போறது"
“இல்லை பாட்டி இது என்னோட வீடு இல்லை...என் மேல பாசமா இருந்த டாடி இப்போயில்லை...ஈகோ பிடிச்ச ஷ்ரவன் தான் இங்க இருக்காங்க” என்றதும்...ஹரிதா ஓடிவந்து மகளின் கையைப் பிடித்து “உள்ள வா... என்ன பிரச்சனைனாலும் பேசி தீர்த்துக்கலாம் இப்படி வெளியே போவது நல்ல பழக்கமில்லை...உனக்கும் பாதுகாப்பு இல்லை” என்றாள்...
“நீங்க மட்டும் புருசன் பொண்டாட்டி, பிள்ளைங்கனு குடும்பமா வாழனும், நான் மட்டும் இப்படிப் பட்டமரமா உங்ககூடயிருக்கணுமா, அதுதான் உங்கவிருப்பமா?”
ஷ்ரவன் ஓடி வந்து " டிவர்ஸ் வாங்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கலாம் ஷானுமா, நான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து நல்லபடியா வாழ்க்கை அமைத்துக் கொடுக்குறேன்டா"
"என் வாழ்க்கை உயிர் எல்லாமே சக்தி தான்...அவரைத் தவிர வேற யாராக இருந்தாலும் எனக்கு வேண்டாம்..ஐ ஹேட் யூ டாடி" என்றவள், வெளியே செல்ல விஷ்ணு வண்டியில் காத்திருக்க வண்டியில் ஏறியவள் கொஞ்சம் மெதுவாக வண்டயை ஓட்டு என்று சொல்லவும்...எதோ பிரச்சனை என்று மட்டும் தெரியுது என்னனுத் தெரியலையே என்று சிந்தனையிலயே வீடு வந்ததும்...அதற்குள்
விஷ்ணு அம்மா காவ்யாவிற்கு ஹரிதாவிடமிருந்து தகவல் வந்திருந்ததால் காத்திருந்தாள் இவர்களுக்காக...
ஷன்மதியிடம் எதுவும் கேட்கவில்லை...அவளோ சொல்லும் மனநிலையில் இல்லை என்பதால் மொட்டை மாடிக்கு சென்று, அங்குள்ள திண்டில் அமர்ந்தவள் அப்படியே கால்களை மடக்கி அதில் தலைவைத்து அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரம் சென்று யாரோ வரும் சத்தம் கேட்டதும் தலையுயர்த்திப் பார்த்தாள் விஷ்ணு சாப்பாடு தட்டில் வைத்து எடுத்து வந்திருந்தான்...
இப்போதுதான் ஹரிதா போனில் அழைத்து எல்லாவற்றையும் செல்லியிருந்தாள்,
அவளிடம் தட்டை நீட்ட தலையை வேண்டாம் என்று ஆட்ட...கையிலெடுத்து ஊட்டிவிடவும் வாயைத் திறக்காமல் இருக்க, அவன் கையை மடக்காமல் அப்படியே நீட்டிக்கொண்டே இருக்க, ஷன்மதியின் பிடிவாதம் தளர்ந்து வாயை திறந்து உணவை வாங்கிக்கொண்டாள்.
விஷ்ணு" எப்படியும் சக்தி அத்தான் கோபத்துல தான் இருப்பாங்க...அங்கிள் தான் அத்தானை இரண்டு தடவை அடிச்சாங்க அதுக்கப்புறந்தான், அவங்க தடுத்தாங்க...அத்தான் பாவம்” என்றான்.
“தப்புப் பண்ணிட்டேன் விஷ்ணு” என வருத்தப்பட்டாள்..
இரண்டு நாள் அங்கயே இருந்தாள், பகலில் விஷ்ணு அவனது வக்கீல் ஆபிஸிற்குச் செல்வான்...பெரிய லாயர் ஒருத்தரிடம் ஜூனியராகச் சேர்ந்திருந்தான்...எப்படியும் ஷானு ஹைதரபாத் சென்றுவிடுவாள் என்று அவன் மட்டுமே சேர்ந்திருந்தான்.
மூன்றாம் நாள் விஷ்ணுவிடம் “நானும் உன்கூடவே ஆபிஸிற்கு ஜூனியாரா சேர்ந்துக்குறேனே...” என்று அவனிடம் கெஞ்சி வேலைக்குச் சேர்ந்தாள்.
விஷ்ணுக்கூடப் போவதினால் அவளுக்கு எந்தப் பயமும் இல்லை...ஒருவாரம் கடந்திருந்த நிலையில். “இன்றைக்கு நான் லீவு” என்று விஷ்ணுவிடம் கூறியிருந்தவள், எங்கோ சென்று வந்தாள் யாருக்கும் எங்குச் சென்று வந்தாள் என்று தெரியாது...விஷ்ணு கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை...தனக்குள்ளாக வைராக்கியம் கொண்டிருந்தாள் ஒரு விசயத்தில்.
அடுத்த நாள் சாப்பிடும் போது விஷ்ணுவிடமும் காவ்யாவிடமும்... “நான் எங்களோட வீட்டுக்கு போறேன்” என்றதும் எல்லோருடைய முகத்திலும் சந்தோஷம்...ஆனால் அவள் அடுத்து சொல்லவும் என்ன செய்யவென்று மண்டையைப் பிய்த்துக்கொண்டனர்...
ஆம் அவள் எங்கவீடு என்று சொன்னது சக்தியின் சென்னைவீட்டைத்தான்...முன்பு சக்தியின் பெற்றோர் கதிரும் நிலாவும் வாழ்ந்த வீடு தான்...அதில்தான் திருமணத்திற்கு முன் சக்தி குடியிருந்தான்.
காவ்யா இந்த விசயத்தை ஹரிதாவிடம் கூற மொத்தக் குடும்பமும் விஷ்ணு வீட்டிற்கு வந்துவிட்டனர்...எவ்வளவு சொல்லியும் ஷன்மதி அவளது முடிவிலிருந்து மாறவில்லை.
ஏற்கனவே தனது மாமனாருக்கு அழைத்துப் பேசிவிட்டாள்...அவனிடமே நியாயம் கேட்டுபேசினாள்.
“இன்னும் எங்களுக்குள்ள பிரிவு வரலை...விவாகரத்து வரைக்கும் நானும் உங்க குடும்பத்து பொண்ணுதான்...நான் போய் ஹாஸ்டல்ல தங்கினா அது என் கணவருக்கும் அவங்க வீட்டாளுங்களுக்கும் கௌரவக் குறைச்சல்னு எனக்குத் தெரியும்...” என்று தனது வாதத்திறமையை அவனிடமே நிருபித்தாள்.
எப்போது சக்தி அந்த வீட்டில் தனியாக இருக்க முடிவெடுத்தவிட்டாளோ,
அப்போதே கதிரும் நிலாவும் அவளுடனே இருக்க முடிவு செய்து...சென்னை வந்திருந்தனர்.
ஷ்ரவனுக்கோ மகள் தன்னை வெறுத்துப் போகின்றளவுக்கு நடந்துக்கிட்டோமே என்ற எண்ணத்தினால் இப்போது அவள் எது செய்தாலும் தடுக்கவில்லை.
ஷன்மதியுடன் நிருபமா சக்தி வீட்டிற்கு வந்திருந்தாரு...அங்கு போனதுக்கப்புறம்தான் தெரியும் சக்தி ஹைதரபாத்திலிருந்து டெல்லிக்கு மாற்றலாகி சென்றுவிட்டான் என்று.
அதைக்கேட்டதும் ஷன்மதிக்குக் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, அதை உள்ளிழுக்கப் போராடியவள் முகத்தினைத் திருப்பிக்கொண்டாள்.
அங்கிருந்த மூவருக்குமே இது புரிந்தது...கதிர் நிருபமாவிடம் எதோ பேசவர...அவரோ "தம்பி யாருமேலத் தப்பு யாருமேல சரினு விவாதிக்க வரவில்லை.
என் பேத்தியோட வாழ்க்கை, இப்போ அது அவளோட கையெலுடுத்திருக்கா... அதற்குத்தான் வந்தேன்
இனி அது அவளோடபாடு உங்களோடப்பாடு, நான் கிளம்புறேன்" என்றவர் சென்றுவிட்டார்.
சக்தியின் அறைக்குள் நுழைந்தவளுக்கு, இங்கு வந்தப்போம் நடந்த நிகழ்வுகள் நியாபகத்திற்கு வந்தது...அப்படியே கட்டிலில் படுத்தவள் தூங்கிவிட்டாள்.
யாரோ தட்டி எழுப்பவும் விழித்தவள் பார்த்தது மாமியார் நிலா தான் எழுப்பியிருந்தாள்.
“சாப்பிடவா?” என்று அழைத்திருந்தாள்...
எழும்பிபோய்ச் சாப்பிட அமரவும் நிலாவிற்குப் போன் வந்தது, எடுத்துப்பேச அது சக்தியென்றதும் நிலா ஷன்மதியைப் பார்க்க.
அவன் அந்த பக்கம் என்ன பேசினான் என்று தெரியாது நிலாவின் முகமே மாறிற்று, அதைக்கண்டு ஷன்மதிக்கும் உள்ளுக்குள் கலக்கம் தான் வேண்டாம் என்று விரட்டிடுவானோ என.
வெளிவரண்டாவில் இருட்டில் அமர்ந்துக்கொண்டு பார்த்திருந்தாள்.
நிலா அவளின் அருகில் வந்தமர்ந்தவள் "நம்மளுடைய காதல் உண்மையா இருக்கும்பட்சத்தில் அதுல உறுதியாக நிற்கணும், கல்யாணத்திற்கு முன்னாடி மட்டுமில்ல...கல்யாணத்திற்குப் பிறகும் உனக்குப் புரியுமென்று நினைக்கிறேன்” என்றவள், “போய்த்தூங்கு” என்று மருமகளை உள்ளே அழைத்து வந்திருந்தாள்.
அடுத்த நாள் காலை எழுந்து கிளம்பியவள் விஷ்ணுவின் வரவிற்காகத் காத்திருந்தவளுக்கு மனமெல்லாம் தன்னையறியாமலயே சந்தோஷ சாமரம் வீசியது போன்று உணர்ந்தாள்.
விஷ்ணுவிடம் வண்டி வேண்டாம் கார் எடுத்திட்டு வரச்சொல்லியிருந்தாள், இருவரும் காரில் சென்று இறங்கிய இடம் குடும்பநல நீதிமன்றத்தின் உள்ளே...
அவளது முறை வந்ததும் உள்ளே சென்று அமர்ந்தவளின், அடுத்த இருக்கையில் யாரோ அமரவும் திரும்பி பார்க்க சக்தி. காக்கிபேண்ட் வெள்ளை சட்டையில் அப்படியே கம்பீரம் குறையாமல்...யார் என்ன செய்தாலென்ன நான் என் வாழ்க்கையை என் எண்ணத்தின் இஷ்டபடிதான் வாழ்வேன் என்று அமர்ந்திருந்தான்.
ஷன்மதி தான் அவனை வாயப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்...அவனது முடிக்கூட அவள் பக்கமாக அசைந்து பார்க்கவில்லை.
நீதிபதி விபரம் கேட்டார்... “திருமணமாகி ஆறுமாதங்கள்கூட ஆகவில்லை அதற்குள்ளாக விவாகரத்தா?” என்று வினவியவர்.
இப்போது சக்தியிடம்...
“நீங்க இரண்டுபேரும் ஒருமித்துதான இந்தப் பந்தத்தில இருந்து பிரிய நினைக்கறீங்க?” என வினவவும்.
இருவரும் அமைதியாக இருந்தனர், ஏற்கனவே சக்தியை அவருக்குத் தெரியுமாதலால் “சொல்லுங்க சார்” என்றதும்...தனது இடது கையை மட்டும் மனைவியை நோக்கி நீட்டியவன் "அவங்களோட விருப்பம் அதுதான்கிற பட்சத்தில் நான் இதுக்குச் சம்மதிக்குறேன்..” என்றதும் ஷன்மதி அவனை திரும்பிப் பார்த்து நேரடியாகவ அவனிடம் “நீங்களே சம்மதிச்சு வேணுமென்று சொன்னாலும் எனக்கு இதுல சம்மதமில்லை” என்றவள், உண்மையைச் சொன்னாள்...அதற்கும் சக்தியின் முகத்தில் எந்தவித உணர்வுகளையும் காண்பிக்கவேயில்லை...
நீதிபதி ஷன்மதியிடம் சக்தியை கைகாட்டி “அவங்க விவாகரத்து குடுக்குறதுக்குச் சம்மதிக்கறாங்க என்னும் பட்சத்தில் ஆறுமாதம் காலம் பொறுத்து ஒருவருடம் முடிந்ததும் கிடைக்கும்... நீங்க உங்களுக்கு ஜீவனாம்சம் எதுவும் எதிர்பார்க்கறீங்கனா அது உங்களோடு வக்கீல் மூலமாக அப்பீல் பண்ணலாம்...வேறெதுவுமிருக்கா" என்று கேட்க...
ஷன்மதியோ “எனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் அது எனக்குத்தேவையுமில்லை...ஆனா அவரோட குழந்தைக்கு என்ன ஜீவனாம்சம் கொடுப்பாராம் அதே மட்டும் கேட்டுச்சொல்லுங்க” என்றவள் சக்தியை பார்க்காமல் நேராகப் பார்த்து அமர்ந்துக்கொண்டாள்.
இதைக்கேட்டவன் சட்டென்று மனைவியைத் திரும்பிபார்த்தான்... அவளது கண்களின் ஓரம் ஈரம்...சிறிது அமைதியாக இருந்தனர் இருவரும்.
சக்தி "எங்களுக்கு விவாகரத்து வேண்டாம்...இதை கேன்சல் பண்ணிடுங்க அதுக்கு என்னென்ன உண்டோ எல்லாம் முடிச்சிட்டுப் போறோம்" எனத் தெளிவாகக் கூறினான்.
இருவரும் வெளியே வந்ததும் விரைவாக நடந்த சக்தி விஷ்ணுவை மட்டும் திரும்பி பார்த்தான்...வேறு யாரையுமே கண்டுக்கொள்ளாமல் கூலர்ஸ் எடுத்து மாட்டியவன் நடந்து...அங்கயே சிறிது நேரம் மரத்தில் சாய்ந்து நின்றான்... அவன் யாரைப் பார்க்கின்றான் என்று தெரியாது,
அவனருகில் சென்று "சக்தி" என்றழைக்கவும், அவன் தனது கைகைளை கட்டிக்கொண்டு சொல்லுங்க என்ற ரீதியில் நிற்க..."சாரி". என்று அவனருகில் நெருங்க,
சக்தியின் வக்கீல் வந்து “என்ன மேடம் எதுவும் சொல்லனுமா என்கிட்ட சொல்லுங்க...நான் சார்கிட்ட பேசுறேன்” என்க...
முறைத்துப்பார்த்தவள் “சக்தி சார்க்கு ஒரு லிப் டு லிப் முத்தங்கொடுக்கணும்...எப்படி?” என்க...
"சாரி மேடம் அத நீங்களே அவருக்கிட்ட கொடுத்துடுங்க"
“அடிச்சு மண்டையெல்லாம் உடைச்சுடுவேன்டா...ஓடிப்போயிடு" என இருக்க ஒட்டுமொத்தக்கோபத்தையும் அவனிடம் காண்பித்தாள்.
திரும்பி தன் வக்கீலைப் பார்த்த சக்தி, “நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்” என்றவன்...
"என்ன மேடம் வேணும் சொல்லுங்க"
ஷன்மதி" உங்களுக்கு என்கிட்ட எதுவுமே கேட்கணும், பேசணும்னு தோணலையா" தனது வயிற்றில் கைவைத்துக்கொண்டே கேட்க...
“உங்க கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு இருந்தேன்...நாலு மாதம்” என்றாள்...
"யார் நீங்க...இத ஏன் என்கிட்ட சொல்றீங்க, உங்கப்பாகிட்ட முதல்ல சொல்லிருக்கலாமே...அதுக்கான சரியான வழி அவரே சொல்லிருப்பாரே" என எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் யாரோ ஒரு மூன்றாம் மனுஷியிடம் பேசுவதுப்போலப் பேசியவன் சென்றுவிட்டான்.
அப்படியே அவள் அதிர்ந்து நிற்கவும்,விஷ்ணு தான் அவளருகில் வந்து தோளைத்தட்ட,உணர்வுக்கு வந்தவள், தங்களுடைய குழந்தை விசயம் சொன்னா சந்தோஷப்படுவான் என்று நினைத்திருக்க அதுவும் பொய்த்துப் போனது...அப்படியே விஷ்ணுவின் தோளில் சாய்ந்து அழுதாள்...
அத்தியாயம்-14
வீட்டிற்குச் செல்லும்போது வண்டி ஓட்டிக்கொண்டே விஷ்ணு கேட்டான் "இப்போ எத்தனாவது மாதம், எந்த டாக்டருக்கிட்டப் போற"
ஷன்மதி திரும்பி “உனக்கு எப்படித்தெரியும்னு” பார்க்க...
உங்க வீட்லயிருந்து வரும் போது “வண்டிய மெதுவா ஓட்டிட்டுப்போனு சொன்னதான...
அப்புறம் இன்னைக்கு அத்தான் கிட்ட பேசும்போது வயித்துல கைய வைத்து தான் பேசிட்டிருந்த அதவச்சுத்தான் கெஸ் பண்ணேன்....”
"ஆமா...நாலு மாதமாச்சுது"
"அத்தான் ஒன்னுமே சொல்லலையா"
"டிவோர்ஸ் வேண்டாம்னு மட்டும் சொல்லிட்டுப் போயிட்டாங்க" எனச் சொல்லும்போதே அவளது குரல் கமறியது.
“சக்தி அத்தானாவது உன்னைப் பிரிந்திருக்கறதாவது...அவருக்கு உன்மேலதான் கோபம்போல... அங்கிள் பண்ணினதுக்கு நீ என்ன பண்ணுவ, சரி விடு எல்லாம் சரியாகிடும் வருத்தப்படாத...
எதுக்கும் அம்மாகிட்டயும் ஒரு தடவை செக் பண்ணிக்கோ சரியா...?”
"ம்ம்..சரி"
ஷன்மதி வீடு வந்து சேர்ந்தும் சக்தி பேசியது தலைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
அப்படியே வெளியே வராண்டாவிலயே அமைதியாக அமர்ந்துவிட்டாள்...
‘சக்தியைப் பற்றித் தெரிந்தும் அவனை அடித்தது அப்பா தப்புனா...நான் கோபத்துல எப்படி நடந்துக்கிட்டேன்.
சக்திக்கு ஷ்ரவனைப் பிடிக்காதென்றில்லையே, இவ்வளவு நாளும் அப்பா செய்ததுக்கு எதிர்வினை காண்பித்திருப்பான், இல்லையென்றால் பதிலடிக்கொடுத்திருக்கானே தவிர என்றுமே ஷ்ரவனை மரியாதை இல்லாமல் பேசியதோ, நடந்துக்கிட்டதோ இல்லையே இதைக்கூடப் புரிந்துக்கொள்ளாமல் என்ன குடும்பம் நடத்தியிருக்கேன் அவங்ககூட. அப்பா பாசம் கண்ணை மறைச்சுட்டுப்போல’ சக்தியின் நியாபகம் அதிகமாக வந்தது... அவனுடனே கூடப் போக வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது... மனதின் பாரம் தாங்க முடியாமல் அந்தத் திண்டுலயே சரிந்து படுத்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
வெளியே வந்த கதிர் மருமகளை அந்தக் கோலத்தில் கண்டதும் அப்படியே அதிர்ந்து நின்றவன்.
“நம்ம வீட்டு பிள்ளைங்கனா இப்படியா விடுவோம்” என்று பதறி நிலாவை அழைக்க, வந்துப் பார்த்தவளுக்கோ மனம் பதறியது...
ஷன்மதியை எழுப்பி “என்னம்மா நீ இங்க வந்து படுத்திருக்க” என்று கடிந்துக்கொண்டவள், அவளைச் சாப்பிட வைத்தாள்...
பின் மெதுவாக “சக்தி போன் பண்ணிருந்தான், சந்தோஷமான விசயத்தையும் சொன்னான்.இந்த நேரத்துல இப்படி ஒருத்தருக்கொருத்தர் பிரிந்திருக்கீங்களேனுதான் வருத்தமாயிருக்கு, ரொம்ப கவனமாக இரும்மா" என்றாள்...
சரி எனத் தலையாட்டியவள் எழுந்து தனதறைக்குச் சென்று அப்படியே படுத்தவள் மனதின் பாரத்தினாலும், உடலின் அசதியினாலும் தூங்கியவளுக்கு வீட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியாது...
மாலையில் விழித்தவளுக்கு மனதின் பாரம் குறைந்தது போன்ற உணர்வு...
கீழே வர அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்த்ததும் முகம் மாறியது.
ஷ்ரவன் ,ஹரிதா , நிருபமா, அத்தை என்று அவளின் மொத்தக்குடும்பமும் வந்திருந்தது...
இந்த வயதிலும் நிருபமா ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டார்...
“என் ராஜாத்தி” என்று அவளுக்கு முத்தமிட்டவர். அவளின் கைப்பிடித்துத் தன் பக்கத்துலயே இருத்தி வைத்துக்கொண்டார்.
விஷ்ணு ஷன்மதி கர்ப்பமாக இருக்கும் விசயத்தைக் காவ்யாவிடம் சொல்ல, அவளோ அதை ஹரிதாவிடம் சொல்ல அப்படியே எல்லோருக்கும் விசயம் பரவியது.
அவர்கள் திரும்பி போகும் வரைக்கும் தகப்பனும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுவதைக்கூடத் தவிர்த்தனர்...
வெளியே செல்லும் போது தான் ஷ்ரவன் மகளின் அருகில் வந்து தலையில் கைவைத்து மௌனமாக ஆசிர்வதித்துவிட்டுச் சென்றான்...
இப்படியாக இரண்டு மாதங்கழித்துத் தங்களது ஆபீஸில் உட்கார்ந்திருந்தாள் ஷன்மதி, விஷ்ணுவோ ஒரு வாரம் தனது சீனியர் லாயருடன் வெளியூருக்கு சென்று விட்டு இன்று தான் உள்ளே நுழைந்தான், அவனுக்கு என்ன வேலை எங்கிருந்தாலும் ஷன்மதியை பார்க்கணும். அதனால் இறங்கியதும் அவசரமாக ஷன்மதியை பார்ப்பதற்கு அறைக்குள் எப்போதும் போல வேகமாக நுழைய,
அதே நேரத்தில் அங்கு இருந்து வெளியே வந்த ஒரு பெண் விஷ்ணுவின் மீது மோத அவள் கையில் இருந்த சூடான டீ விஷ்ணுவின் மீதும் அந்தப் பெண்ணின் மீதும் சிந்தியது. இடித்த வேகத்தில் அந்தப் பெண் விழப்போகவும் விஷ்ணுவை பிடித்துக்கொண்ட அந்தப் பெண்ணோ " ஐயா” என்று அவனையும் சேர்த்து விழவைக்க...மொத்தத்தில் கலவரமாக இருக்க, சத்தங்கேட்டு எட்டி பார்த்த ஷன்மதியோ சிரித்துவைத்தாள்.
விஷ்ணு கீழேயும், அவனுக்கு மேல் அந்தப் பொண்ணும் அந்தப் பொண்ணின் சடைபின்னல் அவனைச் சுற்றியிருந்தது...
ஷன்மதி தான் மெதுவாகக் குனிந்து இருவரையும் பிரித்து விட்டாள்... அவளுக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் எழும்பி நின்ற இருவரையும் பார்த்து இன்னும் அதிகமாகச் சிரித்தாள்.
“ஷானு சிரிக்காத” என்று கத்தியவன்...
“யாருடி நீ எங்க ஆபிஸுகுள்ள என்ன பண்ற?” என்று கேட்டு, நேரடியாகவே அந்தப்பெண்ணிடம் "பார்த்து வரத் தெரியாதா..கண்ணு என்ன பின்னந்தலையிலயா இருக்கு?” என்று கோபத்தில் கத்தினான்.
அந்தப் பொண்ணோ ஷன்மதியை பார்த்து "யாருக்கா இவரு வந்ததிலிருந்து பேசிக்கிட்டே இருக்காங்க... இவங்களுக்கு வாய் ஒரு நேரமும் சும்மா இருக்காதா" என்று கேட்கவும்.
அதற்கும் ஷன்மதி சிரித்து வைக்க, விஷ்ணுவோ "ஷானு இந்த வாயாடி யாரு என்னையவே இப்படிப் பேசுது...லூசா இந்தப் பொண்ணு" என்று தன் மேல் சிந்திய டீயைத் துடைத்துக்கொண்டே கேட்க...
"லூசா, மரியாதையா பேசுங்க...வாடி போடினு சொன்னீங்கனா நல்லாயிருக்காது சார்” என அழாத குறையாகச் சொன்னாள்....
ஷன்மதி தான் இப்போது சமாதானப்படுத்தினாள்...
"விஷ்ணு அது நம்ம சீனியருக்கு சொந்தக்காரப் பொண்ணு, பேரு ஸ்ரீஜா ஊர்லயிருந்து வந்திருக்கா, இங்க வேலைக்குனு சேர்த்திருக்காங்க" என விவரம் சொன்னாள்.
“ஸ்ரீஜா இதுதான் என் பெஸ்ட் பிரண்ட் விஷ்ணு, சொல்லிருக்கேன்ல அவன்தான் இவன்"
விஷ்ணு "வேலைக்கா இவளையா, இதே ஆபிஸ்லயா ஒரு டீயவே எடுத்திட்டு வர தெரியலை, ஒழுங்க வாய் பேசாம வேலைய மட்டும் பார்க்க சொல்லு” என்று சொன்னவன் ஷன்மதியின் அருகிலிருந்த சேரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்...
ஷன்மதிக்கோ இப்போது ஆறுமாதம் என்பதால் வயிறு நன்றாக மேடிட்டிருந்தது, வேலைக்கு வரவும் டீ போட்டு குடுத்துவிடுவாள் ஸ்ரீஜா. அப்படி இருவருக்கும் டீ எடுத்து வந்தவள் ஷன்மதிக்கு கொடுத்துவிட்டு தன்னுடையதை குடிக்க எடுத்துவரவும்தான் இந்தக் கலவரம்.
ஸ்ரீஜா ப்ளஸ் டூ முடித்துவிட்டு, கம்ப்யூட்டரில் டிப்ளமோ முடித்திருக்கிறாள், பி.ஏ. தொலைத்தூரக்கல்வியில் முடித்திருக்கின்றாள். சாதாரணக் குடும்பத்திலுள்ள பெண்.
அங்குள்ள மொத்த விபரத்தையும் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பதுதான் அவளது வேலை, ஆனாலும் ஷன்மதியை விட மூன்று வயதிற்கு இளையவள், அதனால் ஷன்மதியை அக்கா என்று தான் அழைப்பாள்..
ஆனால் ஸ்ரீஜாவிற்கும் விஷ்ணுவுக்கும் தான் முட்டிக்கொள்ளும் அடிக்கடி... அவன் ஏதாவது எழுதி வைத்து விட்டுப் போயிருந்தால் அதைக் கம்ப்யூட்டரில் அப்டேட் பண்ணுவதற்காகப் பார்த்தால்,அவனது எழுத்து ஸ்ரீஜாவிற்குப் புரியவே செய்யாது... திட்டிக்கொண்டே செய்வாள்.
இப்படித்தான் ஒரு நாள் அவன் வெளியே சென்று மறுபடியும் வந்தவன் பார்த்தது... அவன் எழுதிக்கொடுத்த பேப்பரை வைத்து “மூஞ்சியும் முகரையவும் பாரு, இஞ்சித் தின்னக் குரங்கு மாதிரி எப்பவும் உர்ர்ருனு இருந்திட்டு...இதுல வேற எழுத்தைப் பாரு...கோழி கிறுக்குனாப்ல” என்று திட்டிக்கொண்டிருந்தவளைத்தான்.
இப்போது விஷ்ணு அவளின் முன்னாடி வந்து நிற்கவும்... ஆத்தி என்று சேரிலிருந்து எழும்பியவள், அப்பாவியாகத் தனது முகத்தை வைத்துக்கொண்டு நிற்க...
“சரியான ஊர்நாட்டானா இருந்துக்கிட்டு என்னையவே கிண்டல் பண்றியா என்ன” முறைத்துக்கொண்டு அவளது கையைப் பிடிக்க வர...
பேப்பரைக் எடுத்துக்கொண்டு அவனைத் தள்ளிவிட்டு ஓடியவள் ஷன்மதியிடம் போய் நின்றாள்...
“அக்கா விஷ்ணு சார் திட்டுறாங்க...என்னனுக் கேளுங்கனு” புகார் வாசிக்க.
விஷ்ணு அழைத்துக் கேட்க அவனோ “நீ அவளுக்குச் சப்போர்ட் பண்ணாத ஷானு, என்னை இஞ்சி தின்ன குரங்குனு திட்டிட்டு இருந்தா, முதல்ல அத என்னனுக் கேளு” என்று அவனும் புகார் வாசித்தான்.
“ஸ்ரீஜா நீ போ” என்று அவளை அனுப்பி வைத்தவள். விஷ்ணுவைத்தான் இப்போது அதட்டினாள்
"அவதான் சின்னப் பொண்ணு, நீ வக்கீலுடா, அவக்கிட்ட இறங்கி சண்டைப் போடுற...என்னடா இது. சின்னப் பிள்ளைமாதிரி" என்றாள்.
தினமும் அவர்களின் பஞ்சாயத்தைத் தீர்க்கறதுக்கு ஷன்மதி தான் நீதிபதி...
சீனியர் இருந்தால் மட்டும் மூன்று பேரும் அமைதியாக வாலைச் சுருட்டிவிட்டு அமைதியாக இருந்தனர்.
எப்போதும் விஷ்ணு சீனியருடன் கேஸ் விஷயமாக வெளியில் தான் இருப்பான் அதனால் ஷன்மதியுடன் ஸ்ரீஜா அதிக நெருக்கமாகப் பழகி இருந்தாள்.
இங்கோ இரவு வேலையில் தனது மொபைலைத் தலையணையில் வைத்து சரிந்துப்படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்...
ஷன்மதி வயிற்றைத் தள்ளிக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தாள்...அவளது முகத்தைத் தொட்டுத் தொட்டு பார்த்தான்...பின்னாடி யாரிடமோ பேசவதற்குச் சட்டென்று திரும்ப "லூசு இப்படியாடி திரும்புவ, பிள்ளையை வயித்துல வச்சுகிட்டு" எனத் தானாக மொபைலைப் பார்த்துப் பேசினான்.
இப்படித்தான் அவனது இரவு நேரங்கள் கடந்த மூன்று மாதங்களாக நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
பிரச்சனை நடந்தன்று இனி இந்த வாழ்க்கையே வேண்டாமென்ற உறுதியுடன் தான் ஹைதராபாத் வந்தான்...வந்த இரண்டாவது நாளிலயே மனைவியைப் பார்க்க மனது துடிக்கத்தான் செய்தது.
இங்கேயிருந்தால் தானே என்று உடனே வேறு இடத்திற்கு மாறி சென்றால் நல்லாயிருக்குமே என்று தோன்றியது...அவன் நினைக்கத்தான் செய்தான் கடவுள் நிறைவேற்றியே கொடுத்துவிட்டார்.
ஒரே வாரத்தில் டெல்லிக்கு மாற்றலாகி சென்றவனுக்கு, இடியாக வந்திறங்கியது மதுரையிலிருந்து வந்த செய்தி...ஷன்மதி டிவோர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றாள் என்று.
"ஷன்மதி நீ இவ்வளவு தானா" என்ற ஒற்றே வார்த்தையில் முடித்தவன் , அதை அனுப்பச் சொல்லி கையெழுத்துப்போட்டு அனுப்பிவிட்டான்.
கதிரிடம் ஷன்மதி பேசியதை நிலா சக்தியிடம் சொல்லவும்தான், நிதானமாக யோசித்தான்.
‘டிவோர்ஸ்க்கு சைன் பண்ணவ நம்ம வீட்டுக்கு எதுக்குப்போகணும்’ என்று சந்தேகத்துடன் தான் கோர்ட்டிற்கு வந்தான்...
ஷன்மதி கர்ப்பமாக இருப்பதைச் சொல்லவும் ஒரு நிமிடம் சக்தியின் மனம் துள்ளியது தான் ஆனாலும் அவனது கோபம், தன்மானம் அவனை இறங்கி வரவிடவில்லை.
சக்திக்கு ஷன்மதி மேல் கொள்ளைக்காதல்...ஆனால் அவள் செய்த செயலோ ஒரு ஆண்மகனாக அவனது தன்மானத்தைச் சீண்டிவிட்டிருந்தது.
ஸ்ரீஜா விளையாட்டாக ஷன்மதியிடம் “அக்கா ஏழாவது மாதம் வளைகாப்பு போடுவாங்க தான, உங்களுக்கு எப்போ?” என்று கேட்கவும், ஷன்மதிக்குமே ஆசையாக இருந்தது...
சக்தியும் அவளும் அருகருகே அமர்ந்து வளையல் போடணும் என்று சில நொடி கற்பனை செய்து பார்த்தவள், அது நடக்குமோ என்று பெருமூச்சொன்றை விட்டவள்...
“தெரியலைப்பா பெரியவங்க கிட்டதான் கேட்கணும்” என்று பதிலளித்தாள் ஸ்ரீஜாவிற்கு.
மாலை வேலை முடித்துக் காரில் போகும்போது ஸ்ரீஜா கேட்டதைச் சொல்லவும், “ஓ...அவ கேட்டாளா...
உனக்கு ஆசையா இருக்கா ஷானு?” என்று அவளைப் பார்த்துக் கேட்க...
“ஆமா...ரொம்ப எல்லாப் பெண்களுக்கும் இந்த ஆசையிருக்கும், முதல் குழந்தை இரண்டுபேரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து வளையல் போடணும் எல்லாரும் எங்களையும், வயிற்றில் இருக்கப் பாப்பாவையும் ஆசீர்வதிக்கணும்” எனத் தன் ஆசையைச் சொன்னாள்.
“சக்தி அத்தானுக்குப் போன் பண்ணியாவது கேளேன்...வளைகாப்பு வைக்கணும் வாங்கனு...”
“போடா தினமும் போன்ல கூப்பிடுறேன்...அங்கயிருந்துதான் எந்தப் பதிலும் வரமாட்டுக்கு இப்படியே நாங்க இரண்டு பேரும் இருந்துருவோம்னு பயமா இருக்கு...” என்று பெருமூச்சொன்றைவிட்டு வேறு பேச்சு பேசி மனதை சமன்படுத்தினாள்...
அடுத்த நாள் முதல் விஷ்ணுவும் ஆபிஸிற்கு வந்து ஷன்மதியை விட்டுவிட்டு சிறிது இங்கேயும் வேலைகளைப் பார்த்துவிட்டு சீனியருடன் கோர்ட்டிற்குச் செல்வான்...
ஒவ்வொரு நாளும் உள்ள வரும்போது ஸ்ரீஜாவை பார்ப்பான், தான் உண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருப்பாள், எந்தவித அலட்டலும் இல்லாத இயற்கை அழகி ஆனால் முகத்தில் அடிக்கடி புன்னகை காணாது போய்விடும்... ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருப்பாள்...
விஷ்ணு அங்கியிருந்தா எவ்வளவுக்கெவ்வளவு ஒதுங்கியிருக்க முடியமோ அவ்வளவு தூரம் ஒதுங்கி இருப்பாள்...
ஸ்ரீஜாவின் பேச்சுக்கள் எல்லாம் ஷன்மதியோடு முடிந்துவிடும், சீனியர் லாயர் வந்து ஏதாவது கேட்டால் அதற்குப் பதில் சொல்வாள் அவ்வளவே...
இப்படியாக நாட்கள் செல்லச் செல்ல விஷ்ணு ஆபீஸ் அருகில் வரும் போதே ஸ்ரீஜாவைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் அவன் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது, எவ்வளவு கட்டுப் படுத்தினாலும் அவனது கண்கள் ஸ்ரீஜாவை நோக்கியே செல்லும்...
ஒரு நாள் ஏதோ பைல் எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீஜாவின் பின்பக்கம் சென்று இந்த விஷ்ணு அவளது அருகே சென்று “ஸ்ரீ” என்று அழைக்கவும் திடீரென்று கேட்ட சத்தத்தில் பயந்து விழப்போனவளை விஷ்ணுதான் தாங்கிப் பிடித்து இருந்தான்...
இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று பார்க்க விஷ்ணு அவளது பார்வை எதிர்க்கொண்டு பார்க்க, அவளது கண்கள் அவனை விழுங்க ஆரம்பித்தது...
பார்வையை மெல்ல விலக்கியவள், அவனது கைப்பிடியிலிருந்தும் விலகி அவளது இடத்திற்குச் சென்றவள், அடிக்கடி விஷ்ணுவை ஏறிட்டுப் பார்த்தாள்...
ஒருமாதம் கடந்திருந்த நிலையில் விஷ்ணுவிற்கோ ஸ்ரீஜாவின் மேல உள்ள ஈர்ப்பு அதிகமாகி காதலாக மாறியிருந்தது...அதை அவளிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பான் முடியவில்லை இன்று எப்படியாவது சொல்லவேண்டும் என்று தீர்மானம் செய்தவன்...
மாலை நேரம் அவள் இருக்கும் பைல்கள் நிறைந்த அந்த முன்னறைக்கு வந்தவன்...
மெதுவாக அவளருகில் வந்து நின்றதும், யாரோ நிற்பது போன்ற நிழாலாடவும்
ஏறிட்டுப் பார்த்தவள் “என்ன சார் எதுவும் ஃபைல் வேணுமா எடுத்துத் தரவா?” என எழும்பியவளின் கையைப் பிடித்திருந்தான், அவளோ பயத்தில் முகமெல்லாம் வெளிறி கண்கள் இரண்டும் நர்த்தனமாட அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே அவனிடமிருந்து கைகளை உருவியவள், பயத்தில் சுவற்றோடு ஒட்டி நிற்க, அவளது அருகில் அதிகமாக நெருங்கியவன்...
அவளது கண்களைப் பார்த்து " இந்தக் கண்கள் என்னைக் காதலோடு பார்க்கணும்னு ஆசையா இருக்கு, ஏன்னா எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, உன்னைக் காதலிக்கிறேன், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு விருப்பம் எனக்கு"
இதைக்கேட்டவளின் கண்களில் கண்ணீர் வரவும் பதறி" விளையாட்டுக்கு பேசலை, உண்மையாகவே உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, அழாத ப்ளீஸ் நீ அழறது எனக்குக் கஷ்டமாயிருக்குடா"
தன் கண்களைத் துடைத்தவள் "நான் ஏற்கனவே கல்யாணம் ஆனப் பொண்ணு சார்"
விஷ்ணு அதிர்ந்து "என்ன சொல்ற நீ?” என்று கேட்டான்.
"ஆமா எனக்குக் கல்யாணமும் ஆகி என் கணவர் இறந்துட்டாருங்க, நான் இப்போ ஒரு விதவை சார்"
மொத்தமாக அதிர்ந்து நின்றான் விஷ்ணு...